ஜெ.ஊழலை நினைவுபடுத்தி கொண்டேயிருப்பேன்: சிதம்பரம்
கோவை:
நல்லாட்சி தான் முக்கியம், அதற்காக ஜெயலலிதாவின் ஊழலை மக்கள் மத்தியில் நினைவுபடுத்திக் கொண்டேஇருப்பேன் என கோவையில் இரண்டாவது கட்டமாக தொண்டாத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய வந்தப.சிதம்பரம் தெரிவித்தார்.
கோவையில் தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் போட்டியிடும்தொண்டாத்தூர் தொகுதியில், அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் சுகன்யா ராஜரத்தினத்தை ஆதரித்துப.சிதம்பரம் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். பிரச்சாரத்தின்போது அவர் பேசியதாவது:
த.மா.கா ஜனநாயகப் பேரவை இப்போது பெற்று வரும் வளர்ச்சி கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நல்லாட்சி தான்நமக்கு முக்கியம்.
திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும் தமிழகத் தேர்தலில்போட்டியிடுகின்றன. 3வதாக தனியாகச் சென்ற நண்பர் ஒருவர் என்னதான் பம்பரமாகச் சுழன்றாலும், இந்ததேர்தலில் வெற்றி பெற முடியாது.
இரண்டு இடங்களுக்கு நான்கு இடங்களில் போட்டியிட்டு, வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்ய வைத்துமக்களிடையே தான் செய்து ஊழலை மறைக்க திசை திருப்பும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டு வருகிறார்.
உயிர் உள்ளவரை ஜெயலலிதா ஊழலை மறக்க விடமாட்டேன். தனது ஆட்சியைப் பற்றி பேசாமல், கலைஞரைத்தாக்கி ஒப்பாரி வைத்து வருகிறார். தேர்தல் களத்தில் வாழ்வா சாவா என சவால் விட்டு வருகிறார் ஜெயலலிதா. இதுதேர்தல் களமா இல்லை ஆபரேஷன் தியேட்டரா? வாழ்வு சாவு பற்றி கவலைப் பட?
தமாகா ரயிலில் தடம்புரண்ட பெட்டிகளில் ஒன்று தான் எ.ஸ்.ஆரின் வேட்பளாராக திமுக வேட்பாளரைத் தேர்வுசெய்ய வேண்டும். 18 காரட் தங்கத்திற்கு மாற்றாக 22 காரட் தங்கத்தை நினைக்கலாம். 22 காரட் தங்கத்திற்குப்பதிலாக 24 காரட் தங்கத்தை நினைக்கலாம்.
ஆனால், பித்தளை மாற்றாக இருந்து விடக் கூடாது. ஒரு நல்லாட்சிக்கு மாற்றாக சிறப்பான ஆட்சி இருக்கலாம்.அதனை கலைஞர் தருகிறேன் என்கிறார். அவரது கரங்களை வலுப்படுத்துங்கள் என பேசினார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
எஸ்.ஆர். பாலசுப்ரமணியத்தை எதிர்த்து மட்டும் பிரச்சாரம் செய்ய இங்கு நான் வரவில்லை. ஜனநாயகப்பேரவையில் 4 ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 2000 தமாகாவினர் ஜனநாயகப் பேரவையில் இணைந்துள்ளனர்.அதற்காகவும் வந்துள்ளேன். கருத்துக் கணிப்பால் தேர்தலில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. தேர்தலுக்குப் பிறகுத.மா.கா காங்கிரசில் இணையும் என கிருஷ்ணா கூறிய கருத்து குறித்து த.மா.காவிடம் தான் கேட்க வேண்டும்.
டி.என் சேஷன் கூறிய கருத்துக்கள் தவறானது. அவர் கூறியதற்கு சட்டத்தில் இடம் இல்லை. ஜனநாயக மரபும்அல்ல. தமிழகத்தில் கடும் போட்டிக்குப் பின்னர் திமுக ஆட்சி அமைக்கும் என்றார் சிதம்பரம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications