அசாமில் 4 உல்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
கவுஹாத்தி:
அசாமில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 4 உல்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வசெய்திகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் தேர்தல் வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆகஉயர்ந்துள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் கூறுகையில், அசாம் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பார்பெட்டாமாவட்டத்தில் உல்பா தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
பார்பெட்டா தலைநகர் கவுஹாத்தியிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போது சில தீவிரவாதிகள் ஒரு வீட்டுக்குள் பதுங்கியிருந்தனர்.ராணுவ வீரர்கள் அவர்கள் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில்வீட்டுக்குள் பதுங்கியிருந்த 4 உல்பா தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
பல தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பித்து ஓடினர். அப்பகுதியிலிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கையெறிகுண்டுகள், கிரானைடு வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவத்தில் உயிரிழந்த 4 தீவிரவாதிகளும் 40 பேர் கொண்ட தீவிரவாத அமைப்பில் உறுப்பினர்களாகஉள்ளனர்.
மே 10 ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடப்பதையொட்டி, இவர்கள் ஆக்கிரமித்திருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்திவருகிறார்கள் என்றார்.
உல்பா தீவிரவாதிகள் தலைவரின் உறவினர்கள் கடத்தல்:
இதற்கிடையே, அசாமில் உள்ள லக்ஷ்மிபூர் மாவட்டத்தில் உல்பா தீவிரவாதிகள் இயக்கத் தலைவர் பரேஷ் பாரூக்என்பவரின் உறவினர்கள் இரண்டு பேரை அடையாளம் தெரியாத ஒரு கும்பல் கடத்திச் சென்றது.
அசாமில் சட்டசபைத் தேர்தல் நடப்பதையொட்டி இதுவரை பல அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள்கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அசாம் கன பரிஷத் கட்சித் தொண்டர்கள் ஆவர்.
கடந்த 20 வருடங்களில் அசாமில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களில் 10,000 க்கும் மேற்பட்டோர்படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications