நாளை 4 மணியுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியுடன் முடிவடைகிறது.

தமிழக சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி அதற்கு மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இதுவரை இல்லாத அளவுக்கு யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை அவ்வளவு எளிதாக கணிக்க முடியாதஅளவுக்கு சஸ்பென்ஸ் நிறைந்த தேர்தலாக இது இருக்கிறது.

திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும் முக்கிய போட்டியாளர்களாக களத்தில்உள்ளன. இது போக மதிமுக தனித்துப் போட்டியிடுகிறது.

அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் தேர்தல் பிரசாரம் தீவிரமாக தொடங்கி நடந்து வருகிறது. செவ்வாய்க்கிழமைமாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அக்னி நட்சத்திரவெயிலை கண்டுகொள்ளாமல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி வெளியிட்ட அறிக்கையில், 1951-ம்ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வாக்குப்பதிவு முடிவதற்கு முன்பு உள்ள 48 மணி நேரத்திற்குஅதாவது 8ம் தேதி பிற்பகல் 4 மணி முதல் 10-ம் தேதி பிற்பகல் 4 மணி வரை, எவர் ஒருவரும், தேர்தல்நடைபெறும் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில் பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக் கூடாது.

திரைப்படங்கள், நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள், தேர்தல் பற்றிய விளம்பரங்கள் செய்யக் கூடாது. இதை மீறிநடப்பவர்கள் 2 ஆண்டு சிறைத்தண்டனை பெறுவர்.

10ம் தேதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வாக்குப் பதிவு தொடர்ந்துஇடைவெளியின்றி நடைபெறும் என்று கூறினார் சாரங்கி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+