For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் காங்கிரசுக்கு அதிக வெற்றி வாய்ப்பு?

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

தமிழகத் தேர்தல் களத்தைப் போலவே கேரளாவிலும் இப்போது இரு அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.சில ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசமே அங்கும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரள மாநிலத்தில் நிரந்தரமாக இரண்டு அணிகள் இருந்து வருகின்றன. ஒன்று இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி(எல்.டி.எப்). மற்றொன்று ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூ.டி.எப்).

இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி என்பது கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையிலானது. காங்கிரஸ்தலைமையிலான முன்னணிதான் ஐக்கிய ஜனநாயக முன்னணி.

இந்த இரு அணிகளுக்கும் இடையே இந்த முறை புதிதாக முளைத்திருப்பது பாஜக என்ற 3வது அணி.

இந்த மாநிலத்தில் இரு அணிகளுடனும் பாஜகவால் கூட்டு வைத்துக் கொள்ள முடியாது. ஒரு அணியில் பிரதானஎதிர்க்கட்சியான காங்கிரஸ். மற்றொரு அணியில் பரம எதிரி கம்யூனிஸ்ட். எனவே, எப்போதும் தனித்து நின்று3வது இடத்தை பாஜக தக்க வைத்துக் கொள்ளலாம். குறைந்த தொகுதிகளிலேயே போட்டியிடும் பாஜகவுக்கு,சட்டசபைக்குள் நுழைய இந்த முறை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தனி அணியாக நிற்கும் பாஜக, ஒரு இடத்தைக் கைப்பற்றும் எனக் கூறப்படுகிறது. 30க்கும் மேற்பட்ட இடங்களில்போட்டியிட்டாலும் கூட பாஜகவுக்கு 3வது இடம் தான் எனக் கூறப்படுகிறது.

தற்போது நடந்து வரும் இடதுசாரிகளின் முன்னணி ஆட்சியில், பல்வேறு காரணங்கள் வெற்றி வாய்ப்பைப்பாதிக்கும் காரணிகளாக உள்ளன. அவற்றில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகள்முக்கியத்துவம் வகிக்கிறது. இதில் பலர் பலியானபோதும், கள்ளச்சாராய வியாபாரிகளுடன் அரசியல்வாதிகள்கொண்டிருந்த தொடர்புதான் மாநிலம் முழுவதும் பரப்பாகப் பேசப்பட்ட விஷயமாகும். இதனால், மாநிலத்தில்இடதுசாரிகளுக்குக் கெட்ட பெயர் உண்டு.

இந்த கள்ளச்சாராயச் சாவைப் போன்று, மற்றொரு சம்பவமும் உண்டு. பாஜக தொண்டர்களுக்கும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே நடந்த வெட்டு, குத்து, கொலை சம்பவங்கள் கண்ணூ

இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது என ஐக்கிய முன்னணியினர் குற்றம்சாட்டுகின்றனர். இது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்குப் பாதகமான அம்சமாக உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணியில், வழக்கம்போல உள்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.கருணாகரன், அந்தோணி ஆகியோருக்கு இடையே நிலவும் பூசல், கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தஅதிருப்தியால், தேர்தல் பணிகள் பாதிப்படைந்துள்ளன.

மேலும், கேரள மாநிலத்தில் சோனியா காந்தி மேற்கொண்ட பிரச்சாரம் மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. பலஇடங்களில் அவர் திட்டமிட்டபடி பிரச்சாரம் செய்ய இயலவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்தஏமாற்றத்திற்கு உள்ளாயினர். இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இடதுசாரிகள் கருதுகின்றனர்.

எது எப்படி இருந்தாலும், காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்புக் கிடைக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X