அமைச்சருக்கு இணையான கெத்து.. ”கொறடா” என்றால் என்ன? அதிகாரங்கள், கடமைகள் என்ன?
சென்னை: விருகம்பாக்கம் எம்.எல்.ஏ சபரிநாதனை முதல்வர் விஜய் தமிழக அரசின் கொறடாவாக நியமித்துள்ளார். ஒரு எம்.எல்.ஏ கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டால், கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்படலாம். அதனால் தான் அரசியலில் கொறடா பதவி மிகவும் சக்திவாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கொறடா என்றால் என்ன? கொறடாவின் பணி என்ன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
இந்திய அரசியலில் "கொறடா" பதவி என்பது சாதாரணமான ஒன்று அல்ல. சட்டசபைக்குள் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டை உறுதி செய்யும் முக்கிய பொறுப்பே கொறடாவுக்கு உள்ளது. முக்கிய விவாதங்கள், நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற நேரங்களில் அனைத்து எம்.எல்.ஏக்களும் அவையில் இருக்க வேண்டும், கட்சியின் முடிவுப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்வது இவரது வேலை ஆகும்.

கொறடா என்றால் யார்?
கட்சிக்கும் அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படுகிறார். "கொறடா உத்தரவை மீறிய எம்.எல்.ஏ.க்கள்" போன்ற சொற்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும். இங்கிலாந்து நாடாளுமன்ற வழிகளைப் பின்பற்றி, இந்தியாவில் கொறடா பதவி உருவானது. சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி, அரசு கொறடாவை நியமிக்கும். எதிர்க்கட்சிகளும் தங்களுக்கு ஒரு கொறடாவை நியமிக்கின்றன.
கொறடாவின் முக்கிய கடமைகள்
குறிப்பிட்ட நாட்களில் உறுப்பினர்கள் வருகை கட்டாயம். வாக்கெடுப்பு தினங்களில் இது மிகவும் அவசியம். கட்சியின் முடிவின்படியே உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். இதனை உறுதி செய்வது கொறடாவின் முதன்மைப் பணி. அரசு தீர்மானங்கள் மீது எம்.எல்.ஏ.க்கள் பேச இவர் அனுமதிப்பார். மானியக் கோரிக்கைகள் பற்றிய விவாதங்களிலும் இவருக்குப் பங்குண்டு. இந்த தகவல்களை சபாநாயகருக்குத் தெரிவிப்பதும் இவர் பொறுப்பு.
கொறடா அதிகாரத்திற்கான விதிவிலக்குகள்
கொறடா பதவிக்கு ஒரு முக்கியமான விதிவிலக்கு உள்ளது. இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் இதற்கு விதிவிலக்கு. அப்போது கொறடாக்கள் தங்கள் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்த முடியாது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம். கொறடா தனது அதிகாரங்கள் மூலம் கட்சியின் ஒழுங்கை நிலைநாட்டுகிறார். சட்டமன்ற, நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அவர் முக்கியப் பங்காற்றுகிறார். கட்சியின் நிலைப்பாட்டைப் பாதுகாக்க இது அவசியம். சில நேரங்களில் உறுப்பினர்களின் சுதந்திரமும் மதிக்கப்படுகிறது.
கொறடாவின் அதிகாரங்களும் சலுகைகளும்
கொறடா உத்தரவை மீறினால் நடவடிக்கை உண்டு. கட்சியின் முடிவை எதிர்த்து வாக்களித்தால் பதவி பறிப்பு பரிந்துரைக்கப்படும். அவைத் தலைவரிடம் இதுபற்றி அவர் பரிந்துரை செய்வார். இதன்மூலம் சம்பந்தப்பட்டவர் பதவி நீக்கப்படலாம். அரசு கொறடாவிற்கு மாநில அமைச்சருக்கு நிகரான தகுதி உள்ளது. அமைச்சர்களுக்கு வழங்கும் சலுகைகள் இவருக்கும் கிடைக்கிறது. உதாரணமாக, வாகனம், தனி அறை போன்ற வசதிகள் இவருக்கு உண்டு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications