டெலிகிராமில் நீட் வினாத்தாள் விற்பனை.. நாசிக் வரை நீண்ட நெட்வொர்க்.. மாணவர் சுபம் அதிரடியாக கைது!
மும்பை: நீட் வினாத்தாள் கசிந்ததாகப் புகார் எழுந்த நிலையில், கடந்த மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே இளங்கலை நீட் வினாத்தாளை விற்றதாகச் சொல்லி ஹரியானாவை சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் வினாத்தாள் வழக்குகளை சிபிஐ இப்போது விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இப்போது மருத்துவ இளங்கலை படிப்புகளுக்கு நீட் மூலமாகவே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதன்படி இந்தாண்டு நீட் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடந்தது. இருப்பினும், நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகப் புகார்கள் எழுந்தது. இதையடுத்து மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், புதிய நீட் தேர்வு விரைவில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மகாராஷ்டிராவின் நாசிக்கில், 2026 நீட் யுஜி கேள்வித்தாளை விற்றதாக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் டெலிகிராம் மூலம் வினாத்தாளை வாங்கி, அதை ஹரியானாவை சேர்ந்த ஒருவருக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. அவர் சுபம் கைர்னார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், பி.ஏ.எம்.எஸ் மாணவர் எனக் கூறப்படுகிறது.
இவரை நாசிக் குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. நீட் கேள்வித்தாள் கசிவு வழக்கை விசாரிக்கும் பொறுப்பில் உள்ள சிபிஐ நான்கு குழுக்கள், தற்போது சுபத்தை காவலில் எடுக்க நாசிக்கிற்கு வந்துள்ளன.












Click it and Unblock the Notifications