காவிரி நீர் பிரச்சனையை விவசாயிகள் தீர்க்க வேண்டும்: கிருஷ்ணா
கோவை:
காவிரி நீர் பிரச்னையை இரண்டு மாநில விவசாயிகளும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும், இதற்காக இரு மாநிலஉறவுகளும் பாதிக்கப்படக் கூடாது என கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம் கிருஷ்ணாபிரச்சாரம் மேற்கொண்டார். கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
காவிரி நீர் பிரச்சனை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சனை. இந்தப் பிரச்சனைக்குதீர்வு காண, தமிழக விவசாயிகள் கர்நாடக விவசாயிகளைச் சந்தித்து பேச வேண்டும். வெளிப்படையான இந்தப்பேச்சின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும். காவிரிப் பிரச்னையால் இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ளஉறவு எந்த விதத்திலும் பாதிப்படையக் கூடாது.
இந்தப் பிரச்னை குறித்து இரு மாநில விவசாயிகளும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தஒப்பந்தத்தை மத்திய அரசுடன் பரிசீலனை செய்து ஏற்றுக் கொள்வது பற்றி முடிவு செய்யலாம்.
தமிழகம் உள்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தீவிரவாதம் அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில்தேர்தல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தீவிரவாதத்திற்கான ஆதாரத்தை வெளியிட முடியாது.
வட மாநிலங்களில் காங்கிரசுடன் தீவிரவாதிகள் தொடர்புள்ளதாக பா.ஜ குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு எவ்விதஆதரமும் இல்லை. இந்தியாவைப் பாதிக்கும் இரண்டு விஷயங்கள், மதவாதமும், தீவிரவாதமும் தான்.இதனை ஒழிக்கப் பாடுபடுவோம். தமிழகத்தில் வரும் தேர்தல் முடிவுக்குப் பின் நல்ல நிலை ஏற்படும்.
நளினியை சோனியா காந்தி மன்னித்தது, மனிநேயத்திற்காகத் தான். நளினியை மன்னித்ததால் தீவிரவாதத்தைமன்னித்ததாக அர்த்தம் இல்லை.
பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தை வைத்துத்தான் பா.ஜ ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால், இந்த வழக்கில்,அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் சந்தேகம் உள்ளது.
ஜெயலலிதாவின் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து அரசியல், மற்றும் சட்டரீதியாக தீவிர ஆய்வு செய்ய வேண்டும்.இதற்குப் பின்னர் இதில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றார் கிருஷ்ணா.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications