இலங்கை அரசுக்கு முஸ்லீம் கட்சி எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் இருக்கும் முக்கியமான முஸ்லீம் கட்சி இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதாக எச்சரித்துள்ளது.

இலங்கையில் முஸ்லீம் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைத் தடுக்காவிட்டால். சந்திரிகா தலைமையிலானஆளும் கட்சியான மக்கள் கூட்டணிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என இலங்கை முஸ்லீம்காங்கிரஸ் (எஸ்.எல்.எம்.சி) எச்சரித்துள்ளது.

கடந்த புதன்கிழமை இலங்கையில் வாழும் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும், சிறுபான்மை முஸ்லிம்களுக்கும்இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். பல கடைகளும், வாகனங்களும் சேதமடைந்தன.

முஸ்லீம் கடைக்காரர் ஒருவர் ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். இந்த கும்பல் ஆளும் கட்சி அமைச்சருக்குவேண்டியவர்கள் என கூறப்படுகிறது. இதையடுத்து முஸ்லீம்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே மோதல்ஏற்பட்டது.

இந்த கலவரம் இலங்கை தலைநகரம் கொழும்பிலும் பரவியதால், நிலைமையை கட்டுக்குள் ஊரடங்கு உத்தரவுஅமல் படுத்தப்பட்டது.

எஸ்.எல்.எம்.சி.அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

முஸ்லீம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாட்டின் பல பகுதிகளில் வாழும் முஸ்லீம் மக்கள் மீதும்நடத்தப்படுமோ என நாங்கள் அஞ்சுகிறோம். இது மதவாத சக்திகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்.

முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவில்லையென்றால் எஸ்.எல்.எம்.சி. அரசுக்குஅளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டிய நிலை வரும் என கூறப்பட்டுள்ளது.

எஸ்.எல்.எம்.சி.தலைவர் ராஃப் ஹக்கீம் சென்ற வருடம் சந்திரிகா குமாரதுங்கா 100 நாட்களுக்குள்முஸ்லீம்களுக்காக தனி போலீஸ் கமிஷன் உள்ளிட்ட அரசியல் சீர்திருத்தங்களை கொண்டு வராவிட்டால் அரசுக்குஅளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் என கூறியிருந்தார்.

தற்போது அவர் சந்திரிகா அமைச்சரவையில் வர்த்தக துை

இப்போது எஸ்.எல்.எம்.சி. தனிப்பட்ட சுதந்திரமான போலீஸ் கமிஷன் அமைக்கப்பட வேண்டும். ஏனென்றால்மாவெனெல்லாவில் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது போலீசார் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர்.

முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் மீதுஉடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் முஸ்லீம் மக்களுக்கும், அவர்களது உடைமைகளுக்கும்பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். மசூதிகளும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என வற்புறுத்தி வருகிறது.

கடந்த முறை நடந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் எஸ்.எல்.எம்.சி. 10 தொகுதிகளில் வெற்றி பெற்று சந்திரிகாஅரசுக்கு ஆதரவளித்தது. இவர்களது ஆதரவால்தான் சந்திரிகா அரசு அமைக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+