அடுத்த முதல்வர் ஜெ.தான்: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவை முதல்வராக தேர்ந்தெடுத்து ஆளுனரிடம் மனுகொடுத்தால் அவர் ஆட்சேபிக்க மாட்டார் என பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம் செய்து வருகிறார்.அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.அமோக வெற்றி பெறும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 141 எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஜெயலலிதாவை முதல்வராக ஆக்கவேண்டும் என கவர்னரிடம் மனு கொடுப்பார்கள்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவை முதல்வராக தேர்ந்தெடுத்து மனு கொடுத்தால்அதை ஆளுனரும் ஆட்சேபிக்க மாட்டார். மக்கள் தீர்ப்பளித்த பின் சட்டம் எதுவும் செய்ய முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications