கருணாநிதிக்கு எப்படி வந்தது ரூ 5,000 கோடி சொத்து? ஜெ.கேள்வி
சேலம்:
கருணாநிதி குடும்பத்திற்கு 5 ஆயிரம் கோடி குடும்பச் சொத்து எப்படி வந்தது என்பது பற்றி விளக்கம் அளிக்கவேண்டும் என சேலத்தில் அதிமுகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வினா எழுப்பினார்.
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக அணித் தலைவியும், அதிமுகப் பொதுச் செயலருமான ஜெயலலிதா அவரதுகூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கருணாநிதி ஆட்சியில் ஊழல்களுக்குப் பஞ்சமே இல்லை. ரேஷன் அரிசியில் ஊழல், மருந்துப் பொருட்களில்ஊழல், இலவச வேஷ்டி சேலையில் ஊழல், சந்தன மரக் கிடங்கு எரித்து ஊழல், கொப்பரைத் தேங்காயில் ஊழல்என மக்கள் பணத்தைப் பல வழிகளில் கொள்ளையடித்து ஊழல் செய்துள்ளனர். இப்படிக் கொள்ளையடித்தஅவரது குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.
சன்டிவிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது? வேளச்சேரியில் மு.க ஸ்டாலினுக்குஅரண்மனைபோன்ற பங்களா எப்படி வந்தது? சென்னையில் 112 பங்களாக்களைக் கட்டியுள்ளனர். மதுரை,கோவை ஆகிய இடங்களில் தியேட்டர், பண்ணைகள் எங்கிருந்து வந்தது? இப்படி 5 ஆயிரம் கோடிக்கும் மேல்சொத்துக்களைக் குவித்துள்ள கருணாநிதி இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
தி.மு.க ஆட்சி காலத்தில் என்னையும் அதிமுகவையும் கூண்டோடு அழிக்க கருணாநிதி சதித் திட்டம் தீட்டினார்.அந்த வகையில் என் மீது பொய் வழக்குப் போட்டார். பொய் சாட்சிகளை வைத்தார்.
தேர்தலில் நான் போட்டியிடக் கூடாது என முடிவு செய்தார். ஒன்றுக்கு நான்கு இடங்களில் மனுச் செய்தேன்.அங்குள்ள அதிகாரிகளை மிரட்டி, எனது மனுக்களை நிராகரிக்கச் செய்தார். இறுதி தீர்ப்பு மக்கள் கையில் உள்ளதுஎன்பதை மறந்து விட்டார் போலும்.
கருணாநிதியின் சூழ்ச்சியை மக்கள் ஆதரவோடு வீழ்த்தி எம்.ஜி.ஆர் ஆட்சியை ஏற்படுத்துவேன் என்றார்ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications