பொருளாதார சரிவுக்கு பாஜகவே காரணம்: மார்க்.கம்யூ.
கோவை:
பாரதிய ஜனதாக் கட்சிக் கூட்டணி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி கூறினார்.
கோவை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சி கருணாகரனை ஆதரித்து அவர் பிரச்சாரம்செய்ததாவது:
இப்போது நடக்கும் 5 மாநிலத் தேர்தல்களையும் நாடே எதிர்நோக்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நடக்கும்தேர்தல் முடிவுகளைப் பொறுத்து அகில இந்திய அளவில் கூட மாற்றம் ஏற்படும்.
மத்திய அரசின் கொள்கையால் இங்குள்ள சிலர் கூட வேலையை இழந்திருக்கலாம். இந்த ஆட்சியில் தான்தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்ததோடு வேலையையும் இழந்துள்ளனர்.
மக்கள் நலத் திட்டங்களுக்கு உலக வங்கியிடம் இந்தியா கடன் வாங்கியுள்ளது. இந்தக் கடனுக்காக ஆண்டுக்குஇந்தியா ஒன்றே கால் லட்சம் கோடி ரூபாய் வட்டியாகச் செலுத்தி வருகிறது.
இதனால் இந்தியாவில் சுதந்திரமான பொருளாதாரச் சூழ்நிலை இல்லை. அந்நியப் பொருள்களை அனுமதித்ததன்மூலம் இந்தியாவின் செல்வங்களை வெளிநாட்டவர் கொள்ளையிட அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார் சீதாராம்யச்சூரி.












Click it and Unblock the Notifications