மே.வங்கத்தில் தேர்தல் வன்முறைக்கு ஒரு தொண்டர் பலி
பராக்போக்:
மேற்குவங்காள சட்டசபை தேர்தல் வாக்குபதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு துவங்கி மாலை 4 மணிக்குமுடிவடைந்தது. மதியம் 1 மணி வரை 40 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
குண்டு வீச்சு தாக்குதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்.
மால்டா மற்றும் பாரம்பூர் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு:
வன்முறை சம்பவங்கள் காரணமாக மால்டாவலிலுள்ள 24 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது. ஜாங்கிபூர் மற்றும் பரம்பூரில் இரண்டு வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 112 வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாக கூறி பிஜாப்பூர்தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜகதீஷ் தாஸ் பிஜாப்பூர் காவல்நிலையம் முன் உட்கார்ந்துஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இவர் கூறுகையில், வாக்களிப்பதற்காக காலையில் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் வாக்குச்சாவடி முன்வரிசையில் நின்று கொண்டிருந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் அவர்களை மிரட்டி வாக்களிக்கவிட முடியாமல் தடுத்தனர்
எல்லா தொகுதிகளிலும் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். இது குறித்து தேர்தல் அதிகாரிக்கு புகார் மனுஅனுப்பியுள்ளேன் என்றார்.
ஜெகதீஷ்தாஸ் அளித்த புகாரின்பேரில் பிஜாபூர் பொறுப்பு அதிகாரி பிரச்சனைக்குரிய இடங்களை சென்றுபார்வையிட்டார்.
நோவாபாராவில் உள்ள மகாதேவானந்தா தொகுதியில் இரு கட்சி தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்காரணமாக வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட்து.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாராநகர் மற்றும் கமார்ஹதி தொகுதிகளில்வாக்குப்பதிவு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. வேறு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்ட பின்வாக்குப்பதிவு நடைபெற்றது.
யு.என்.ஐ.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications