சென்னையில் கொளுத்தும் வெயிலுக்கு 3 பேர் பலி
சென்னை:
சென்னையில் கொடுமையாக வாட்டி வரும் கோடைவெயிலுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர்.
அக்னிநட்சத்திரம் இந்த மாதம் 4ம் தேதி தொடங்கியது. வெயிலின் கொடுமை நாளுக்குநாள் அதிகமாகி மக்களைவாட்டி வருகிறது. இந் நிலையில் அனல் காற்று அடித்து வருவது மக்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கி வருகிறது.சென்னையில் இதுவரை கோடை வெயிலுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், திங்கள்கிழமை சென்னையில் இரு இடங்களில் கோடைவெயிலுக்கு இரண்டுபேர் பலியாகியுள்ளனர்.
சென்னை பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்துவரும் டெல்லிபாபு (வயது 25) என்பவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வரும் போது சென்னை புறநகர் பகுதியானபெருங்குளத்தூருக்கு அருகே வெயில் கொடுமை தாங்காமல் மயங்கி விழுந்து இறந்து போனார்.
சென்னை நங்கநல்லூரில் தனது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 59 வயதுள்ளமுதியவர் வெயில் கொடுமைக்கு பலியானார்.
சென்ற வாரம் சென்னை திரு.வி.க. நகரில் ஒருவர் வெயிலின் கொடுமை தாங்காமல் இறந்து போனார். இதுவரைசென்னையில் மட்டும் வெயிலின் கொடுமைக்கு 3 பேர் பலியாகியுள்ளனர் என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications