"அம்மாவின் அதிரடி .. சென்னை கமிஷனருக்கு கல்தா

Subscribe to Oneindia Tamil

சன்னை:

முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவின் முதல் அதிரடி நடவடிக்கையாக சென்னை நகர காவல்துறைகமிஷனர் காளிமுத்து அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை நகர காவல்துறை கமிஷனர் காளிமுத்து, தீவிரமான கருணாநிதி அனுதாபி என்று காவல்துறை வட்டாரம்மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பேச்சு உண்டு. இவரது பதவிக்காலத்தின்போது சென்னை நகரில்அதிமுகவினர் அடக்கி ஒடுக்கப்பட்டனர் என்று புகார் கூறப்பட்டது.

தேர்தல் சமயத்தில், சேத்துப்பட்டு பகுதியில் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் கலந்து கொண்ட அதிமுகபொதுக்கூட்டத்தின்போது கொலை வெறித் தாக்குதல் நடந்தது. அது தொடர்பாக காளிமுத்து தீவிர நடவடிக்கைஎடுக்கவில்லை என்று அதிமுகவினர் புகார் கூறினர்.

இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளார் ஜெயலலிதா.முதல்வரான பின்னர் முதல் நடவடிக்கையாக நகர காவல்துறை கமிஷனர் காளிமுத்து அப்பதவியிலிருந்துமாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் தற்போது மதுவிலக்குப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக உள்ள அலெக்சாண்டர்,சென்னை நகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்பு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அலெக்சாண்டர் உளவுப் பிரிவில் பணியாற்றியவர் என்பதுகுறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் அலெக்சாண்டர், இந்தத் தேர்தலில்ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெல்வதற்கு நிறைய யோசனைகளைக் கூறியதாக ஒரு பேச்சு உண்டு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+