யாரையும் பழிவாங்க மாட்டேன்: முதல்வர் ஜெயலலிதா
சென்னை:
யாரையும் பழிவாங்கும் வகையில் அதிமுக அரசோ நானோ நடந்து கொள்ள மாட்டோம் என்று முதல்வர்ஜெயலலிதா கூறினார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 132 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது.
இதையடுத்து கவர்னர் பாத்திமா பீவி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை பதவியேற்க அழைத்தார்.திங்கள்கிழமை மாலை தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டார்.
முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டபின் ஜெயலலிதா தனது போயஸ் தோட்ட வீட்டுக்குச் சென்றார்.அங்கிருந்து இரவு 7 மணிக்கு தலைமைச் செயலகத்துக்குச் சென்றார்.
தலைமைச் செயலகத்தில் அவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளர்களாக இருந்தவர்களை நீக்கி விட்டு,தனக்காகப் புதிய செயலாளர்களை நியமித்தார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
கடந்த 1996 ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. அப்போது அதிமுகஅடியோடு அழிந்து விட்டது என்று பலர் கூறினார்கள்.
அதையடுத்து நான் பல இன்னல்களுக்கு ஆளானேன். ஆனால் அதையெல்லாம் மீறி நான் இப்போது முதல்வராகப்பதவியேற்று உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.
ஆறு மாதத்திற்குள் நான் எம்.எல்.ஏ.வாக ஆக வேண்டும். அதில் எந்த வித பிரச்சனையும் இருக்காது என்றுநம்புகிறேன்.
தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் அதிமுக செய்யும். பெண்களுக்குத் தேவையான அனைத்துஉதவிகளையும் அதிமுக செய்யும்.
இந்த அரசு யாரையும் பழிவாங்கும் நோக்கத்தில் நடந்து கொள்ளாது. ஆனால் தவறு யார் செய்திருந்தாலும்அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் பதவியேற்கும் சமயத்தில் சுமார் 1 மணி நேரம் சென்னை நகரில் மின்சாரம் தடை பட்டிருந்தது. யாராவதுவேண்டுமென்றே செய்திருக்கலாம். அவர்களால் இன்று மட்டும்தான் தவறு செய்ய முடியும். நாளை முதல் அதேபோல் நடக்க முடியாது.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு கேட்டால் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம் என்றார் முதல்வர்ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications