கருணாநிதி ராஜினாமாவை கவர்னர் ஏற்றார்
சென்னை:
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து கருணாநிதி அளித்த ராஜினாமா கடிதத்தைகவர்னர் பாத்திமா பீவி பெற்றுக் கொண்டார்.
கடந்த 10 ம் தேதி நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அருதிப்பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்றது.
இதையடுத்து கவர்னர் பாத்திமா பீவி, ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்குமாறு அழைத்தார்.கவர்னர் அழைப்பு விடுத்ததையடுத்து ராஜ்பவனில் திங்கள்கிழமை நடந்த பதவியேற்பு விழாவில் ஜெயலலிதாதமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
இதற்கிடையே திமுக தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் கவர்னரிடம்தங்களது ராஜினாமா கடிதங்களை அனுப்பி வைத்தனர்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, கருணாநிதி மற்றும் திமுக அமைச்சர்களின்ராஜினாமா கடிதங்களை கவர்னர் பாத்திமா பீவி ஏற்றுக் கொண்டார். கவர்னர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டசெய்திக்குறிப்பு இத்தகவலைத் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications