கரூரில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கரூர்:

கரூரில் குடும்பத் தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளுடன் குட்டையில் குதித்து தற்கொலை செய்துகொண்டாள் தாய். 3 பேரின் சடலங்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் அருகே பஞ்சமாதேவியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்குஈஸ்வரி, மேரி, வளர்மதி என 3 மகள்கள் உண்டு. இரண்டாவது மகள் ராமாயி (26) க்கும் ரொட்டிபாளையத்தைசேர்ந்த கண்ணன் (29) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு பிரியதர்சினி (2) என்ற மகளும் சூர்யா (3) என்ற மகனும் உண்டு. இந்த நிலையில் கண்ணனுக்கும்ராமாயிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. ராமாயி சிறிது நாட்கள் தனது தாயானபழனியம்மாளின் வீட்டில் வந்து தங்கியிருந்தார்.

மகளின் நிலையைக் கண்ட பெற்றோர்கள் ஊர் பஞ்சாயத்தில் பிரச்னையை கிளப்பி இருவரையும் சேர்த்து வைக்கமுயற்சி மேற்கொண்டனர். ஆனால், பஞ்சாயத்திற்கு தயாராக இல்லாத ராமாயி, தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கணவன் வீட்டிற்கு போவதாகக் கூறி புறப்பட்டார்.

இந்த ஊரில் பஞ்சமா தேவி ஊரில் அமராவதி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் ஓரத்தில் 20 அடி ஆழம் மிக்கதண்ணீர் நிறைந்த குட்டை ஒன்று உள்ளது. மகன் சூர்யா, மற்றும் பிரியாதர்ஷினி ஆகியோரை தனது இடுப்பில்சுமந்தவாறு வந்த ராமாயி, குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு குழந்தைகளுடன் தாயின் பிணம் மிதப்பதைப் பார்த்த சிலர், போலீசாருக்குத் தகவல்கொடுத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+