இலங்கை வந்தார் நார்வே தூதுக்குழு தலைவர்
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையேசமரச பேச்சுவார்த்தையைத் தொடங்க முயற்சித்து வரும் நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம்செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு வந்தார்.
இதுகுறித்து நார்வே தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இலங்கையில் கடந்த 18 ஆண்டுகளாக புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நார்வே தூதுக்குழு பல வகைகளில் முயற்சி எடுத்து வருகிறது.
அதன்படி, இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கிவைக்கும் வகையில் நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் ஈடுபட்டு வருகிறார். இருப்பினும் இலங்கைஅரசு சண்டை நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்துள்ளது.
ஆனால் புலிகள் கூறுகையில், இலங்கையில் அமைதிப்பேச்சுவார்த்தை தொடங்குமுன் புலிகள் இயக்கத்தின் மீதுவிதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். முன்னதாக, இலங்கையில் தனிஈழம் கேட்டுவிடுதலைப்புலிகள் கடந்த 18 ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். இந்தச் சண்டையில் இதுவரை 63, 000 பேர்உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு கடந்த 1996 ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்துஇந்தியா மற்றும் இங்கிலாந்திலும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் கடந்த வாரம் ஐரோப்பாவில் விடுதலைப்புலிகள்அரசியல் பிரிவு ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கத்தை சந்தித்துப் பேசினார்.
தற்போது கொழும்பு வந்துள்ள இவர், அதிபர் சந்திரிகாவை சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தையை விரைவில்தொடங்குமாறு கேட்டுக் கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications