ஜெ.வின் அமைச்சர்கள் .. ஒரு சிறு குறிப்பு
சென்னை:
ஜெயலலிதா தலைமையிலான புதிய தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் பற்றிய ஒரு சிறுகுறிப்பு.
1. சி.பொன்னையன்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவர். நீண்ட காலம்தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்த பொன்னையன் தற்போது ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். கடந்த ஜெயலலிதா அமைச்சரவையில் கூட இவர் இடம் பெறவில்லை.
திருச்செங்கோடு சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சர் பதவியைப் பிடித்துள்ளார் பொன்னையன்.
2. எம்.தம்பித்துரை.
முன்னாள் மத்திய சட்ட அமைச்சராக இருந்தவர். தர்மபுரி மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.முன்னாள் எம்.பியான தம்பித்துரை பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் லோக் சபா துணை சபாநாயகராக இருந்துள்ளார்.
3. டி.ஜெயக்குமார்.
வட சென்னையில் உள்ள ராயபுரம் தொகுதியில் தேர்வு பெற்றுள்ளவர். கட்சி பாகுபாடின்றி செயல்படக் கூடியவர்என்று தொகுதியில் பெயர் பெற்றுள்ளவர். சொந்த செல்வாக்குடன் அதிமுக அலையும் சேர்ந்து கொள்ளவேஎளிதாக வெற்றி பெற்று அமைச்சராகியுள்ளார்.
கடந்த ஜெயலலிதா அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தவர் ஜெயக்குமார். கடந்த முறை மீன்வளத்துறைஉள்ளிட்ட பல துறைகளை வைத்திருந்தார். 2-வது முறையாக அமைச்சராகியுள்ள ஜெயக்குமார் தற்போது வடசென்னை மாவட்ட அதிமுக செயலாளராக இருந்து வருகிறார்.
4. அய்யாறு வாண்டையார்.
தஞ்சை மாவட்டத்தின் மூத்த காங்கிரஸ் அரசியல்வாதி. 65 வயதாகும் அய்யாறு வாண்டையாரின் குடும்பமேகாங்கிரஸ் பாரம்பரியம் மிக்கது. இவரது தந்தை கிருஷ்ணசாமி வாண்டையார், காமராஜரின் நெருங்கிய நண்பர்.
தீவிர காங்கிரஸ்காரரான அய்யாறு வாண்டையார் 1999ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில்ஐக்கியமானார்.
முதல் முறையாக அமைச்சர் பதவியை ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
5. உப்பிலியாபுரம் சரோஜா.
பொன்னையனைப் போலவே இவரும் எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதிகளில் ஒருவர். நீண்ட காலமாக தீவிரஅரசியலில் இல்லாமல் இருந்த சரோஜா இப்போது அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.
பத்தாவது வகுப்பு வரை படித்துள்ள இவர் கடந்த 1984-ம் ஆண்டு முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.












Click it and Unblock the Notifications