தமிழக வாக்காளர் பேரவை உதயம்
சேலம்:
வாக்காளர்களின் வாக்குரிமையை நிலை நாட்டும் வகையில் தமிழக வாக்காளர் பேரவை என்ற அமைப்புதுவங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்த தேர்தலில் பல லட்சக்கணக்கானோருக்கு ஓட்டுரிமை கிடைக்காமல் போனது. அடையாளஅட்டை உட்பட ஆவணங்கள் இருந்தபோதிலும் வாக்களிக்க உரிமை இல்லாமல் போனது.
இதனால், மனம் நொந்த வாக்காளர்களை இணைத்து இப்போது தமிழக வாக்காளர் பேரவைதொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரவையைத் துவக்கிய ஆக்ஸ்போர்டு ராமநாதன் என்பவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியுள்ளதாவது:
நடந்து முடிந்த சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் ஆயிரக்கணக்கானோர் வாக்களிக்கமுடியாமல் போனது.இதனால் வாக்களார்கள் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாயினர்.
வாக்காளர் அடையாள அட்டையிருந்தும், பிற ஆவணங்களைக் காட்டியும் வாக்ககாளர்களை அதிகாரிகள்வாக்களிக்க அனுமதிக்கவில்லை.
தமிழக வாக்காளர்களின் இந்த நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில்சேர்க்க கட்டணம் எதுவுமின்றி செயல்படும் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம்.
தமிழக வாக்காளர் பேரவை என்ற இந்த அமைப்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் துவங்கப்படும். அமைப்பின்செயற்குழுக் கூட்டம் 22ம் தேதி சேலத்தில் நடக்கவுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications