அதிமுகவினரிடம் "சிக்கிய ரஜினிகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் ரஜினி காந்த்தின் வீட்டுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பொறுப்பேற்றுள்ளார். நடந்து முடிந்த சட்டசபைத்தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தின்அரசியல் சூழ்நிலை தலைகீழாக மாறியுள்ளது.

நேற்று வரை எதிர்க்கட்சி வரிசையில் இருந்த அதிமுக இன்று ஆளுங்கட்சியாக மாறியுள்ளது. ஜெயலலிதாவுக்குவாழ்த்துச் சொல்வதற்காக அவரது வீடு உள்ள போயஸ் கார்டன் பகுதிக்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள்,பிரமுகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அப்பகுதியில் எப்போதும் அதிமுகவினர் கூட்டம்அலைமோதுகிறது.

ஜெயலலிதா வீட்டுக்கு சற்று முன்புதான் நடிகர் ரஜினி காந்த்தின் வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில்அதிமுக ஆட்சியை இழக்கக் காரணமே ரஜினிதான் என்பதை அதிமுகவினர் மறக்கவில்லை. எனவேஜெயலலிதாவின் வெற்றியைக் கொண்டாடும் அதிமுகவினர் ரஜினி வீட்டைக் கடக்கும்போது மறக்காமல் ரஜினியைதிட்டி கோஷமிட்டுச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நிலையில், ரஜினியின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கியபோலீஸார் ரஜினி வீட்டுக்கு வெளியே காவல் காத்து வருகின்றனர். இதேபோல, சென்னை நகரமேயர்மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரது வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+