இலங்கையில் சண்டை: 2 புலிகள் உள்பட 7 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை திரிகோணமலையில் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் 3 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் வெவ்வேறு இடங்களில் நடந்த சண்டையில் இரண்டு புலிகளும், இரண்டு பொதுமக்களும்கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து இலங்கை ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திரிகோணமலை பகுதியில் உள்ள ராணுவமுகாமில் புலிகள் கண்ணி வெடிவைத்துத் தாக்குதல் நடத்தினர். இதில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மத்தூர் என்ற இடத்தில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் ஒருவர்கொல்லப்பட்டார். யாழ்ப்பாணத்தில் ராணுவ வீரர்கள் இரண்டு புலிகளை சுட்டுக்கொன்றனர்.
அம்பாரா பகுதியில் காவல் நிலையத்தின் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் மரணமடைந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications