கவர்னர் செய்தது ஜனநாயக படுகொலை: சுவாமி குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதாவை தமிழக முதல்வராக பதவியேற்குமாறு அழைத்ததன் மூலம் சட்டவிதிமுறைகளை மீறி விட்டார்கவர்னர் பாத்திமா பீவி என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஜெயலலிதாவை தமிழக முதல்வராக அழைத்து ஜனநாயகப் படுகொலை செய்து விட்டார் கவர்னர். சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதியாகப் பணியாற்றிய ஒரு கவர்னர் இவ்வாறு செய்தது பிழையாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 164 மற்றும் 191 ன் படி, ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர்தேர்தலில் போட்டியிட முடியாது. அதே போல் தேர்தல் அதிகாரிகள் அவரைத் தேர்தலில் போட்டியிடஅனுமதிக்கவில்லை. அவரது நான்கு வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டன.

அப்படியிருக்கும்போது ஜெயலலிதாவை முதல்வராக பதவியேற்குமாறு கவர்னர் பாத்திமா பீவி கூறியது தவறாகும்.மக்கள் இப்போது வழங்கியுள்ள தீர்ப்பு தற்காலிகமானதுதான். ஆனால் அரசியலமைப்புச் சட்டமோ நிரந்தரமானது.

ஜெயலலிதா முதல்வராகி விட்டார் என்பதற்காக அவர்மேல் பொதுநலன் கருதி நான் போட்ட வழக்குகளை வாபஸ்வாங்க மாட்டேன் என்றார் சுவாமி.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+