ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் வன்முறை: பேருந்துக்கு தீ வைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி மாவட்டம், கனங்கரைப்பட்டி விளக்கு என்ற இடத்தில்தமிழக அரசுக்கு சொந்தமான பேருந்து ஒன்றை தீயிட்டு கொளுத்தினர்.

இது குறித்து சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமைஇரவு தென்காசியிலிருந்து கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் பயணம் 4 பேர் கொண்டகும்பல் ஒன்று கத்தி முனையில் பேருந்தை நிறுத்தினர்.

அவர்கள் பேருந்தின் ஓட்டுனரையும், நடத்துனரையும் மற்றும் பயணிகளையும் பேருந்தைவிட்டு இறங்குமாறுமிரட்டி அனைவரையும் இறங்க வைத்தனர். அதன்பின் பேருந்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர்.

இந்த சம்பவம் தமிழக முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன் கைது செய்ததை எதிர்த்து நடந்துள்ளதுஎனதெரிய வந்துள்ளது.

சென்ற வியாழக்கிழமை தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. அன்று மாலை நடந்த வன்முறை சம்பவத்தில் ஜான்பாண்டியனும் அவரது ஆதரவாளர்களும் தமிழக சட்டசபையின் துணை சபாநாயகராக இருந்த பரிதிஇளம்வழுதியின் அலுவலகத்தின் மீதும், அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரன் இல்லத்திலும்தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+