மலேசியாவுக்கு ரூ 225 கோடி கடனளிக்கிறது இந்தியா

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்:

மலேசியாவுக்கு ரூ 225 கோடி கடனளிக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.

பிரதமர் வாஜ்பாய் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக மலேசியா சென்றுள்ளார். மலேசியாவில் பல நிகழ்ச்சிகளிலும்அவர் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இந்தியா-மலேசியாவிற்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.பிரதமர் வாஜ்பாய் முன்னிலையில் இரண்டு நாட்டு அதிகாரிகளும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

செயற்கை கோள் செலுத்துவது தொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் மலேசிய நிறுவனத்துடன்ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

கை கடிகார நிறுவனமான எச்.எம்.டி நிறுவனம் மலேசிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.இவை உள்ளிட்ட 10 ஒப்பந்தங்களில் இந்தியாவும், மலேசியாவும் கையெழுத்திட்டுள்ளன.

மலேசியாவுக்கு ரூ 225 கோடி கடனளிக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் வாஜ்பாய் தெரிவித்தார். இதுஇந்தியாவின் ஏற்றுமதிக்கு ஊக்கமளிக்கும் என வாஜ்பாய் நம்பிக்கை தெரிவித்தார்.

கோலாலம்பூரிலிருந்து இந்தியாவிற்கு பாம் ஆயில் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கான விலை உயர்வை மறு பரிசீலனை செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+