கேரள முதல்வரானார் ஏ.கே.அந்தோணி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை ராஜ்பவனில் நடந்த ஒரு எளிய நிகழ்ச்சியில் ஏ.கே. அந்தோணி, கேரளமுதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த மே 10 ஆம் தேதி கேரள சட்டசபைக்கு நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களைப்பெற்று ஆட்சி அமைக்கத் தகுதி பெற்றது.

இதைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வர் பதவியில் அமருவதற்கு கருணாகரன், அந்தோணி ஆகிய இருவருக்குமேகடும் போட்டி இருந்து வந்தது.

இந்நிலையில், சோனியாகாந்தி அனுப்பிய தூதுவரான மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், இருவருக்கும்சமரசம் செய்து வைத்து, அந்தோணியையே முதல்வராக அறிவித்தார்.

புதன்கிழமை நடந்த புதிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும், சட்டசபை காங்கிரஸ் தலைவராகஅந்தோணியே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை காலை ஆளுநர் மாளிகையில், கேரள முதல்வராக அந்தோணிக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் மாநில ஆளுநர் எஸ்.எஸ். காங்க்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+