பாமக, மதிமுக விலகியதே தோல்விக்கு காரணம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பா.ம.கவும், ம.தி.மு.கவும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகியதுதான் தமிழகத்தில்தி.மு.க.கூட்டணி தோல்வியடைந்ததற்கு காரணம் என பிரதமர் வாஜ்பாய் கூறியதை தி.மு.க.தலைவர் கருணாநிதிஒப்புக் கொண்டுள்ளார்.

தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்த பின் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,பா.ம.க.கூட்டணியிலிருந்து விலகியதற்கு பா.ஜ.கவை குறை கூற மாட்டேன்.

ராமதாஸ் விடுத்த கோரிக்கையின் மீதான முடிவெடுப்பதற்கு காலதாமதமானதும் பா.ம.க.- தி.மு.க.கூட்டணியிலிருந்து விலகுவதற்கு ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

ராமதாஸ் தமிழக ராஜீவ் காங்கிரசை தே.ஜ. கூட்டணியிலிருந்து விலக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். இதுகுறித்து ராமதாஸ் எனக்கு கடிதமும் எழுதியிருந்தார்.

பா.ம.க. மத்தியில் தே.ஜ. கூட்டணியில் தி.மு.க. சேர்வதற்கு முன்பிருந்தே அங்கம் வகித்து வந்தது. ராமதாசின்கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலிருந்து பா.ம.க.விலகக்கூடும் என பிரதமர் வாஜ்பாயிடமும், தே.ஜ.கூட்டணியின் நிறுவனர் ஜார்ஜ் பெர்னான்டசிடமும் கூறினேன்.

ஆனால் அவர்கள் இருவரும் பொறுத்திருந்து பார்க்கலாம் என கூறி விட்டனர். தனது கோரிக்கைநிறைவேற்றப்படாததால் ராமதாஸ் தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகி விட்டார்.

ம.தி.மு.க., தி.மு.க.கூட்டணியிலிருந்து விலகியதற்கான காரணத்தை நான் முன்பே கூறியிருக்கிறேன். 3 தொகுதிகள்ஒதுக்குவதில் பிரச்சனை ஏற்பட்டது. பிரச்சனையை தீர்த்துக் கொள்ள விரும்பாமல் ம.தி.மு.க.தனித்துபோட்டியிடுவதாக கூறி கூட்டணியிலிருந்து விலகி விட்டது.

ஊழல் வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டிருப்பதால் தனது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் என அறிந்தஜெயலலிதா வேண்டுமென்றே 4 தொகுதிகளில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பின் தி.மு.க. சதித்திட்டம் தீட்டி தனது மனுவை நிராகரிக்க வைத்து விட்டது எனதி.மு.க. மீது குற்றம் சாட்டி பிரச்சாரம் செய்தார். இது மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியது. அந்தஅனுதாபத்தின் மூலமாக அ.தி.மு.க வெற்றி பெற்று விட்டது என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+