சென்னை கமிஷனராக முத்துக்கருப்பன் நியமனம்
சென்னை:
சென்னை நகர போலீஸ் கமிஷனர் காளிமுத்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கமிஷனராகமுத்துக்கருப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
காளிமுத்து சமூக நீதித்துறை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். முத்துக்கருப்பன் கமிஷனராகநியமிக்கப்படுவதற்கு முன்பு ஆயுதப்படை ஐஜியாக இருந்து வந்தார்.
புதிய கமிஷனர் பொறுப்பை உடனடியாக முத்துக்கருப்பன் ஏற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புகளைகமிஷனர் காளிமுத்து ஒப்படைத்தார்.
முத்துக்கருப்பன் ஏற்கனவே சென்னை நகர துணை கமிஷனராக இருந்தவர். பதவியேற்றுக் கொண்ட பின்செய்தியாளர்களிடம் முத்துக்கருப்பன் பேசுகையில், இந்தப் பதவியை ஏற்பதில் பெருமை அடைகிறேன்.ஏற்கனவே சென்னையில் பொறுப்பில் இருந்துள்ளதால் இங்கு கடமையாற்றுவது எளிதானதாகும். ரவுடிகள்அட்டாகாசத்தைக் குறைப்பதே எனது முதல் நடவடிக்கையாகும் என்றார்.
முத்துக்கருப்பன் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம்படித்தவர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் எம்.ஏ பட்டம் முடித்த அவர் 1980-ல் ஐ.பி.எஸ். அதிகாரியானார்.
மதுரையில் துணை கமிஷனராக பணியாற்றியுள்ளார். அதுதவிர பல்வேறு இடங்களிலும் உயர் பொறுப்புகளில்இருந்துள்ளார்.
முன்னதாக சென்னை நகர கமிஷனராக அலெக்சாண்டர் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டிருந்ததுநினைவிருக்கலாம். ஆனால் கடைசி நேரத்தில் அவர் மாற்றப்பட்டு முத்துக்கருப்பன் நயமிக்கப்பட்டுள்ளார்.
காளிமுத்து மட்டுமின்றி வேறு சில அதிகாரிகளும் கூட மாற்றப்பட்டுள்ளனர். சென்னை நகர கூடுதல் போலீஸ்கமிஷனராக இருந்து வந்த பாலச்சந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர். ஆனால் அவருக்குப் புதிய பொறுப்புஎதுவும் இன்னும் வழங்கப்படவில்லை.
இதேபோல, சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டி.ஜிபியாக இருக்கும் அலெக்சாண்டர் மாற்றப்பட்டு தமிழ்நாடுபோலீஸ் அகாடமியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications