சேலம் மாணவி சென்னையில் மீட்பு
சென்னை:
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பரிதவித்த சேலம் மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம்ஒப்படைத்தனர் போலீஸார்.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மகள் விஜயா, பத்தாவது வகுப்புத் தேர்வுஎழுதி முடித்துவிட்டு ரிசல்ட்டுக்காக காத்துள்ளார்.
இதனிடையே, வீட்டில் வேலைகளை சரியாகச் செய்யாததால் விஜயாவை அவரது பெற்றோர் திட்டியதாகத்தெரிகிறது. இதனால் மனமுடைந்த விஜயா, கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
சேலத்திலிருந்து கிளம்பிய ஒரு ரயிலில் ஏறிய அவர் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்.ஆனால் அதற்குப் பிறகு எங்கு போவது என்று அவருக்குத் தெரியவில்லை. ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள அரசுபொது மருத்துவமனை அருகே நின்று கொண்டிருந்தபோது சிலர் அவரைக் கேலி செய்தனர்.
அப்போது மருத்துவமனைக்கு வந்திருந்த திருவள்ளூரைச் சேர்ந்த முனுசாமி என்பவர், விஜயாவை மீட்டுதிருவள்ளூர் போலீஸ் எஸ்.பி.யிடம் கொண்டு போய்ச் சேர்த்து விஷயத்தைத் தெரிவித்தார். இதையடுத்து, சேலம்மாவட்ட போலீஸாருடன் திருவள்ளூர் போலீஸார் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
அதன் பிறகு, விஜயாவின் பெற்றோர் சேலத்திலிருந்து கிளம்பி திருவள்ளூர் வந்தனர். அவர்களிடம் விஜயாஒப்படைக்கப்பட்டார். மகளுடன், விஜயாவின் பெற்றோர் நிம்மதியுடன் ஊருக்குக் கிளம்பிப் போயினர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications