திருவனந்தபுரம் ரயிலில் துணிகர கொள்ளை
சென்னை:
சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ரயிலில் காட்பாடி அருகே மர்ம கும்பல் ஆயுத முனையில்கொள்ளையடித்துச் சென்றது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு திருவனந்தபுரம் மெயில்புறப்பட்டுச் சென்றது. ரயில் காட்பாடி நிலையத்திற்கு 9 மணிக்கு வந்து சேர்ந்தது. அப்போது காட்பாடி ரயில்நிலையத்தில்15 பேர் கும்பல் ஏறியது.
ரயில் காட்பாடி நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றது. லத்தேரி என்ற இடத்திற்கு அருகே சென்றபோது திடீரென15 பேர் கும்பலில் ஒருவர் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். பின்னர் 15 பேரும்தங்களிடமிருந்த அரிவாள் போன்ற ஆயுதங்களைக் காட்டி பயணிகளை மிரட்டி அவர்களிடம் இருந்த நகைகள்மற்றும் பொருட்களை பறித்துக் கொண்டனர்.
20 நிமிடம் இந்தக் கொள்ளை தொடர்ந்தது. பின்னர் அக்கும்பல் இருளில் ரயிலை விட்டு இறங்கித் தப்பியது.பின்னர் ரயில் ஜோலார்பேட்டை நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்றது. அங்கு ரயில்வே போலீஸாரிடம்கொள்ளைச் சம்பவம் குறித்து புகார் செய்யப்பட்டது. கொள்ளை நடந்த இடத்திற்கு உடனடியாக ரயில்வேபோலீஸார் விரைந்து சென்றனர்.
காட்பாடி ரயில் நிலையத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்தையடுத்து அப்பகுதியிலுள்ள ரயில் நிலையங்கள்அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications