மே. வங்கத்தில் 48 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்பு
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான 48 பேர் கொண்ட அமைச்சரவைவெள்ளிக்கிழமை பதவியேற்றது. இவர்களுக்கு மேற்கு வங்க ஆளுநர் விரேன் ஜீவன்லால் ஷா பதவி பிரமாணம்செய்து வைத்தார்.
இந்த மாதம் 10ம் தேதி நடைபெற்ற மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலானகூட்டணி இரண்டில் மூன்று பங்கு பெரும்பான்மை பெற்று அவர்கள் வெற்றி பெற்றனர்
வெள்ளிக்கிழமை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 48 பேர் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. இதில் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்பட 34 பேர் காபினெட் அமைச்சர்கள். 14 பேர் இணைஅமைச்சர்கள்.
பதவியேற்பு நிகழ்சியை எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணித்தது. தேர்தலின் போது ஆளும்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மம்தா பானர்ஜிதலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் பல தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். சீதாராம் யெச்சூரி, ஹர்கிஷன் சிங் சுர்ஜித்,முன்னாள் மேற்கு வங்க முதல்வர் உள்ளிட்ட பல கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சி அரை மணி நேரம் நடந்தது.
வெள்ளிக்கிழமை பதவியேற்ற அமைச்சரவையில் 15 அமைச்சர்கள் புதியவர்கள். இவர்களில் 9 பேர் காபினெட்அமைச்சர்கள். சென்ற முறை இருந்த அமைச்சரவையை விட இந்த முறை 1 அமைச்சர் அதிகமாக இடம்பெற்றுள்ளார்.
அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்னமும் ஒதுக்கப்படவில்லை. கூட்டணி கட்சிகளுடன் உள்ள சிறு பிரச்சனைகாரணமாக அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடுக்கு கால தாமதம் ஏற்படக் கூடும் என கூறப்படுகிறது.
இடது சாரி கட்சியினர் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வது குறித்து வெள்ளிக்கிழமை கூடி ஆலோசனைநடத்துகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை எல்லா அமைச்சர்களுக்கான இலாகாக்களும் அறிவிக்கப்பட்டு விடும் எனஎதிர் பார்க்கப்படுகிறது.
தகவல் தொழில் நுட்பத்திற்கென புதிய அமைச்சகமும் அமைக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications