For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் அமைச்சர்களை!

By Staff
Google Oneindia Tamil News

ஏ.கே.செல்வராஜ்

மேட்டுப்பாளையம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். கன்னட கெளடா வகுப்பைச் சேர்ந்தவர்.திருமணம் ஆகாத 37 வயது பிரம்மச்சாரி.

மாணவர் பருவத்திலிருந்து தீவிர அரசியல் ஈடுபாடு காரணமாக அ.தி.மு.க.வில் சேர்ந்து செயல்பட்டு வருகிறார்.அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கும்சென்றுள்ளார். எஸ்.பி.சண்முகநாதன்

ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலிருந்து அ.தி.மு.க.வுக்காக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடிதெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவி வகிக்கிறார். சொந்த ஊர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளபண்டாரவிளை.

நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் சண்முகநாதன். 1972ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் ஈடுபட்டுவருகிறார். கிளை அமைப்பாளர் பொறுப்பிலிருந்து மாவட்ட செயலாளராக உயர்ந்துள்ளார்.

பெருங்குளம் நகரப் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ள சண்முகநாதன் எம்.எல்.ஏ. பதவிக்கு வருவதுஇதுவே முதல் முறையாகும.

நைனார் நாகேந்திரன்

திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். திருநெல்வேலி மாவட்டம் பனகுடி அருகேயுள்ளதண்டையார்குளம் என்ற ஊரைச் சேர்ந்தவர். 40 வயதாகிறது இந்த எம்.ஏ. பட்டதாரிக்கு.

தற்போது பாளையங்கோட்டையில் வசித்து வரும் நாகேந்திரன், மாணவர் பருவத்திலிருந்து அ.தி.மு.க.வில்சேர்ந்து செயல்பட்டு வருகிறார். மாவட்ட எம்.ஜி.ஆர். அணி செயலாளராகவும், நெல்லை மாநகர் மாவட்டஜெயலலிதா பேரவை செயலாளராகவும் இருக்கிறார்.

நாகேந்திரனுக்கு மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

பி.சி.ராமசாமி

மொடக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனை தோற்கடித்து அமைச்சராகியுள்ளார்.

கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த ராமசாமிக்கு மனைவியும், மகனும், மகளும் உள்ளனர்.

தொடர்ந்து 20 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருந்து சாதனை படைத்துள்ளார். 1980ம்ஆண்டு முதல் 2000 வரை கொடுமுடி ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்ததே இவரது சாதனை.

ஈரோடு தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இப்போது ராமசாமி இருக்கிறார்.

எஸ்.செம்மலை

ஓமலூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் செம்மலை. சட்டசபை துணை சபாநாயகராகும்வாய்ப்பு இவருக்கு இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது அமைச்சராகியுள்ளார்.

சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர். வழக்கறிஞர் பதவியைத் துறந்து விட்டு அரசியலுக்கு வந்தவர். 2 முறைஎம்.எல்.ஏ. பதவி வகித்தவர்.

வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் எம்.ஜி.ஆர். காலம் முதல் அ.தி.மு.கவில் இருந்து வருகிறார். இந்திஎதிர்ப்புப் போராட்டங்களில் தீவிரமாக கலந்து கொண்டவர்.

செம்மலைக்கு மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.

பி.தனபால்

சங்ககிரி தொகுதி எம்.எல்.ஏ. அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் அமைச்சராகியுள்ளார்.

எம்.ஜி.ஆர். காலத்து நபர். 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த அனுபவம் உண்டு. மாணவர் அணி அமைப்பாளர்பதவியிலிருந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தற்போது மாநில அமைப்புச் செயலாளராக இருக்கிறார்.

42 வயதாகும் தனபாலுக்கு மனைவி, மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

துரைராஜ்

சேடப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. 52 வயதாகும் இவர் ஒரு பி.ஏ. பட்டதாரி. 1977-ல் கிளைச் செயலாளராகஇருந்தார். பல்வேறு கட்சிப் பொறுப்புகளை வகித்துள்ளார் இவர்.

சேடப்பட்டி முத்தையாவின் செல்வாக்கையும் மீறி இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ஜெயலலிதாவின்அன்பையும் பெற்று அமைச்சராகியுள்ளார்.

துரைராஜுக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

பன்னீர் செல்வம்

பெரியகுளம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குள் நுழைபவர். சொந்த ஊர் பெரியகுளம். தேவர் சமுதாயத்தைச்சேர்ந்தவர். பி.ஏ படித்துள்ளார்.

தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருக்கும் பன்னீர் செல்வத்திற்கு அமைச்சர் பதவி மட்டுமில்லாமல்எம்.எல்.ஏ. பதவியும் புதிது.

இவருக்கு மனைவியும் மகள், 2 மகன்களும் உள்ளனர்.

ஆர்.விஸ்வநாதன்

நத்தம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சேர்வை சமுதாயத்தைச் சேர்ந்தவர். நத்தம் அருகே உள்ள உலுப்பகுடியைச்சொந்த ஊராகக் கொண்டவர்.

திண்டுக்கல் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்த இவர் தற்போது மாவட்ட அ.தி.மு.க.செயலாளராக உள்ளார்.

நத்தம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X