சுட்டெரிக்கும் வெயிலால் கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள்

Subscribe to Oneindia Tamil

கோவை:

தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் கொடுமையால் காட்டு யானைகள் தாகத்தால் மலைப் பகுதியிலிருந்துகிராமப்பகுதியை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன.

இந்த யானைகளை விரட்டியடிக்க வனத் துறையினர் " ஆபரேஷன் ஜம்போ என்ற அதிரடித் திட்டத்தை தயார்செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக வெப்பத்தின் கொடுமையாலும், தாகத்தாலும் தவித்த யானைகள் மலைப் பகுதியிலிருந்துகிராமப் பகுதியை நோக்கிப் படையெடுத்தன.

இந்த யானைகள் கூட்டத்திற்குப் பயந்து ஊர் மக்கள் அனைவரும் நள்ளிரவில் வீட்டில் தங்காமல், பள்ளிக்கூடங்களில் தங்கி வந்தனர்.

சுமார் 30 யானைகள் கொண்ட ஒரு பெருங்கூட்டம் ஆனைகட்டி கிராமத்தில் நுழைந்தது. அங்குள்ள விவசாயநிலங்களைத் துவசம் செய்த பின்னர், அருகில் உள்ள ஒரு நீர் வீழ்ச்சிக்கு சென்றது. அங்கு தாகம் தீர தண்ணீர்அருந்தி விட்டு ஓய்வெடுத்தது.

நல்ல உணவும், தண்ணீரும் கிடைத்ததால் இவை அந்த இடத்திலேயே "கேம்ப் போட்டன. இதனால் எந்த நேரத்தில்ஊருக்குள் யானை நுழையுமோ என்ற அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வந்தனர். இது குறித்து வனத்துறையினரிடம்புகார் தெரிவித்தனர்.

வனத்துறையினர் இந்த யானைகளை விரட்டியடிக்க "ஆபரேஷன் ஜம்போ என்ற அதிரடித் திட்டத்தை தயார்செய்தனர். ஞாயிறன்று மாலை அவர்கள் வெடிகளுடன் யானைக் கூட்டத்தை கலைக்கச் சென்றனர். வெடிகளைப்போட்டு விரட்டினர்.

யானைகள் கூட்டம் பிரிந்து மலைப் பகுதியை நோக்கி ஓட ஆரம்பித்தன. மதியம் சென்ற இந்த யானைகள் மீண்டும்அதே இடத்தில் ஒன்று கூடின. மீண்டும் தங்கள் ஆதிக்கத்தைத் தொடங்கின. இதனால் யானைகளைத் தடுத்து நிறுத்தமுடியமால் வனத்துறையினர் தவித்தனர். மீண்டும் அவற்றை விரட்டியடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.

ஒரு யானைக்கு தினம் 200 கிலோ தீவனம் 125 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். தற்போது காடுகளில்வறட்சி நிலவுவதால் யானைகள் இரைதேடி கிராமங்களை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளன.மேலும்,வெப்பத்தின் தாக்கத்தை தவிர்க்க இவை தண்ணீரைத் தேடி அலைகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+