ராஜீவுக்கு தலைவர்கள் அஞ்சலி
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 10-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவர் கொல்லப்பட்டஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள நினைவிடத்தில், தலைவர்கள் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
1991ம் ஆண்டு மே 21ம் தேதி நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ்காந்தி, மனித வெடிகுண்டுக்குப் பலியானார். அவர் மறைந்த இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில்அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் மரகதம் சந்திரசேகர், கர்நாடக அமைச்சர் மலகா ரெட்டிஉள்ளிட்ட பலர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார், பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் ஜெயந்திநடராஜன், தனுஷ்கோடி ஆதித்தன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், சுதர்சனம், ஞானசேகரன்உள்ளிட்ட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, தங்கபாலு, அன்பரசு, முன்னாள் மத்திய அமைச்சர்அருணாச்சலம் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை சார்பில், அதன் அலுவலகத்தில் ராஜீவுக்கு நினைவாஞ்சலி நடந்தது.புரசைவாக்கம் தொகுதி பேரவை உறுப்பினர் ரங்கநாதன் ராஜீவ் படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications