மணிப்பூர் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

Subscribe to Oneindia Tamil

இம்பால்:

மணிப்பூர் சட்டசபையில் திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.

மாநில முதல்வர் ரபீந்தரநாத் கொய்ஜம் அரசு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது.

மணிப்பூரில் சமதா கட்சி சார்பில் கொய்ஜம் முதல்வராக உள்ளார். சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏக்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட 6 அமைச்சர்களை முதல்வர்கொய்ஜம் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். இதற்குக் கண்டனம் தெரிவித்து பாஜக அமைச்சர்கள் 5 பேர் ராஜினாமாசெய்தனர்.

இதனால் மணிப்பூரில் பாஜக, சமதா கட்சி அமைச்சர்களியே பிளவு ஏற்பட்டுள்ளது.

5 பாஜக அமைச்சர்களை இழந்துள்ளதால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நிலைக்கு ஜொய்ஜம் அரசுதள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜக தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

திங்கள்கிழமை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அமைச்சர்கள், கொய்ஜம் அரசுக்கு ஆதரவுதெரிவிப்பார்கள் என்றார்.

இருப்பினும் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை சமதா கட்சி விலக்கிக் கொள்ளும்என்று மிரட்டல் விடுத்த காரணத்தால்தான் மணிப்பூரில் சமதா கட்சிக்கு ஆதரவாக வாக்கெடுப்பில் பாஜகஅமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

சமதா கட்சி செய்தித்தொடர்பாளர் சாம்பு ஸ்ரீவத்சவா கூறுகையில், மணிப்பூரில் பாஜக அமைச்சர்கள் 5 பேர்ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக ஓட்டளிக்காவிடில் நாங்கள் மத்தியில்தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறத் தயங்க மாட்டோம்.

60 அமைச்சர்கள் கொண்டது மணிப்பூர் சட்டசபை. இதில் ஒரு அமைச்சர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது.

மொத்தம் உள்ள 59 அமைச்சர்களில் சமதா கட்சிக்கு 12 எம்.எல்.ஏ.க்களும், பாஜகவுக்கு 26 எம்.எல்.ஏக்களும்உள்ளனர். பாஜகவும், சமதா கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.

திங்கள்கிழமை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியுடன், பாஜக சேர்ந்துசெயல்பட்டால் சமதா கட்சி ஆட்சி கவிழும் அபாயம் உள்ளது.

மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 13 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+