ஆளுநர் உரையைப் புறக்கணிக்க மாட்டோம்: பா.ஜ.க.
சென்னை:
திமுகவைப் போல பாரதீய ஜனதாக் கட்சி ஆளுநர் உரையைப் புறக்கணிக்காது என்று தமிழக பாஜக செயலாளர்எச்.ராஜா கூறியுள்ளார்.
சட்டவிதிகளுக்குப் புறம்பாக ஜெயலலிதாவை முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்ததால் சட்டசபையில்ஆளுநர் உரையை திமுக புறக்கணிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இந்நிலையில், ஆளுநர் உரையைப் புறக்கணிக்க மாட்டோம் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
தமிழக பாஜக செயலாளர் எச்.ராஜா கூறுகையில், மத்திய அரசுடன் சுமூகமாக இருப்பேன் என்று முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். திமுகவைப் போல நாங்கள் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கமாட்டோம் என்றார்.
எம்ஜிஆர் அதிமுக சட்டசபை கட்சித் தலைவர் ஆஸ்டின் கூறுகையில், ஆளுநர் உரையில் கலந்து கொள்வது குறித்துகட்சிக் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.
தமாகா ஜனநாயகப் பேரவை எம்எல்ஏ ரங்கநாதன் கூறுகையில், திமுகவைத் தொடர்ந்து நாங்களும் ஆளுநர்உரையைப் புறக்கணிப்போம் என்று கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறுகையில், உதயசூரியன் சின்னத்தில் நாங்கள்போட்டியிட்டோம். இருப்பினும் எங்களுக்கென்று தனித்தன்மை உண்டு. திமுக தலைவர் கருணாநிதியுடன் பேசிமுடிவெடுப்போம் என்றார் அவர்.
திமுக முடிவுக்கு ஆதரவாக ஓரிரு கூட்டணிக் கட்சிகளே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திட்டவட்டமாகநாங்கள் கூட்டத்தில் கலந்து கொள்வோம் என்று முக்கிய தோழமைக் கட்சியான பாஜக கூறி விட்டது. இந்நிலையில்பிற கட்சிகள் திமுக முடிவுக்கு ஆதரவாக நடந்து கொள்ளுமா என்பது விரைவில் தெரியவரும்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை












Click it and Unblock the Notifications