சட்டசபை கூடியது .. கருணாநிதி வரவில்லை
சென்னை:
தமிழகத்தின் 12-வது சட்டசபை முதல் முறையாக செவ்வாய்க்கிழமை காலை கூடியது. புதிய எம்.எல்.ஏக்கள்பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
11-வது சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து அடுத்த சட்டசபையைத் தேர்ந்தெடுப்பதற்கானதேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைமத்துள்ளது.
12-வது சட்டசபை செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது. புதிய உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமைபதவியேற்றுக் கொண்டனர். காலை 10.30 மணிக்கு தற்காலிக சபாநாயகர் அப்துல் லத்தீப் புதிய உறுப்பினர்களுக்குபதவிப்பிரமாணம் செய்து வைக்கத் தொடங்கினார்.
முதலில் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் கட்சித்தலைவர்கள், சபாநாயகராக பதவியேற்கவுள்ளகாளிமுத்து மற்றும் பிற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
சபைக்கு காலை 10 மணிக்கே முதல்வர் ஜெயலலிதா வந்து விட்டார். முன்னாள் முதல்வரும், தி.மு.கதலைவருமான கருணாநிதி சபைக்கு வரவில்லை. மற்ற தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் வந்திருந்தனர்.
ஜெயலலிதா 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சட்டசபைக்குள் நுழைந்தார். முகத்தில் மகிழ்ச்சி வெளிப்படஅமர்ந்திருந்த அவருக்கு எதிரேயிருந்த எதிர்க்கட்சி வரிசையில், கருணாநிதி காணப்படாதது அ.தி.மு.கஉறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும்.
தி.மு.க உறுப்பினர் பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டிருப்பதால் அவர் சபைக்கு வரவில்லை.
அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், செம்மலை ஆகியோர் டெல்லி சென்றிருப்பதால் அவர்களும் சபைக்கு வரஇயலவில்லை. இந்த 3 உறுப்பினர்களும் பின்னர் பதவியேற்றுக் கொள்வார்கள் என்று தெரிகிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள் கடைசியாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
உறுப்பினர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் முன் தற்காலிக சபாநாயகர் அப்துல் லத்தீப்பேசுகையில், தமிழக சட்டசபைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிய ஒத்துழைத்த காவல்துறையினர், தேர்தல்அதிகாரிகள், பொதுமக்கள் அனைவருக்கும் எம்.எல்.ஏக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications