தோல்வியில் முடிந்த வங்கிக் கொள்ளை முயற்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையிலுள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் கொள்ளையடிக்க நடந்த முயற்சி தோல்வியுற்றது. இதனால்ரூ. 10 கோடி அளவிலான பணம் தப்பியது.

சென்னை எழும்பூர் பகுதியிலுள்ள காஜா மேஜர் சாலையில் பாங்க் ஆப் இந்தியாவின் கிளை உள்ளது. இங்குதிங்கள்கிழமை இரவு யாரோ சிலர் வங்கிக்குள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் காஸ்சிலிண்டர்களைப் பயன்படுத்தி பணம் வைக்கப்பட்டிருந்த அறைகளைத் திறக்க முயன்றுள்ளனர்.

ஆனால் திருடர்கள் எதிர்பாராத விதமாக காஸ் சிலிண்டரில் தீப்பிடித்துக் கொண்டது. இதில் சில வங்கிஆவணங்கள் எரிந்தன. தீயைப் பார்த்துப் பயந்து போன திருடர்கள் தங்களது கொள்ளை முயற்சியைக் கைவிட்டுஅங்கிருந்து தப்பி விட்டனர்.

செவ்வாய்க்கிழமை காலை வங்கிக்கு வந்த ஊழியர்கள் கொள்ளை முயற்சியைப் பார்த்து திடுக்கிட்டனர். வங்கிமேலாளர் உடனடியாக எழும்பூர் போலீஸில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீஸார் தீவிரமாகவிசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+