இவர் கலியுக கலெக்டர்
கோவை:
ஹோட்டலில் வேலை பார்த்த சிறுவனுக்கு சம்பளப் பணத்தை பெற்றுக் கொடுத்து ஊருக்கு பத்திரமாக அனுப்பிவைத்தார் மாவட்ட கலெக்டர்.
கோவையில் காந்திபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்த சிறுவன் முனியசாமி (13). இந்தசிறுவன் ராமநாதபுரம், முதுகுளத்தூரைச் சேர்ந்தவர். பள்ளியில் படித்த வந்த இச்சிறுவன், விடுமுறையில்வேலை செய்து சம்பாதிக்க நினைத்தார்.
எனவே, கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் சர்வராக வேலை பார்த்து வந்தார். சில நாட்கள் சென்றதும், அந்தச்சிறுவன் ஊருக்குச் செல்ல நினைத்தார். ஹோட்டல் முதலாளியிடம் தனக்கு உரிய சம்பளத்தை வழங்குமாறுக்கேட்டார். ஆனால், முதலாளிக் கொடுக்க மறுத்தார்.
ஊருக்குச் செல்ல வழியில்லாத சிறுவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம்ஒரு முறை திங்களன்று நடக்கும் மனு நீதி நாள் அவனுக்கு நினைவு வந்தது. ஒரு மனுவை எழுதிக் கொண்டுமாவட்டக் கலெக்டரைப் பார்க்கச் சென்றார். எல்லோரும் மனுக் கொடுக்கும்போது அவனும் மாவட்ட கலெக்டர்சந்தானத்திடம் மனுக் கொடுத்தார்.
மனுக் கொடுக்க வந்தவன் சிறுவன் என்பதால், ஆச்சரியத்துடன் அவனுடைய பிரச்னையைக் கவனித்தார்கலெக்டர். மனுவைப் படித்து பார்த்த கலெக்டர் உடனே அதிகாரிகளை அழைத்து ஓட்டல் முதலாளியை அழைத்துவர உத்தரவிட்டார்.
ஓட்டல் முதலாளியை அதிகாரிகள் ஜீப்பில் அழைத்துக் கொண்டு வந்தனர். அந்த ஓட்டல் உரிமையாளரிடம்சிறுவன் முனியசாமிக்கு சேர வேண்டிய சம்பளப் பணம் ரூ.500 ஐ பெற்றுக் கொடுத்தார். மேலும், சிறுவனைஜீப்பில் அழைத்துச் சென்று பத்திரமாக பஸ்சில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்தார் கலெக்டர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications