காங்கிரஸ் அலுவலகம் தரைமட்டம்: சேலத்தில் பதட்டம்
சேலம்:
சேலம் அருகே காங்கிரஸ் அலுவலகம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஊராட்சி மன்றத் தலைவரை எதிர்த்து போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் மன்னார்பாளையம் உள்ளது. இங்கு கடந்த 37 ஆண்டுளுக்கு முன்னர் ஒரு காங்கிரஸ் கட்சிஅலுவலகம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தை தற்போது ஊராட்சி ஒன்றியத் தலைவராக உள்ள சக்திவேல்இடித்துத் தள்ளி விட்டார். ஆக்கிரமிப்பைக் காரணம் காட்டி இந்தக் கட்டடம் இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சேலம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கந்தசாமி, பழனிச்சாமிக் கவுண்டர், வைத்தியலிங்கம்ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த 1960ம் ஆண்டு மன்னார்பாளையத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இடம் வாங்கப்பட்டது.
இந்த இடத்தில் 900 சதுர அடியில் ஒரு கட்டடம் கட்டப்பட்டு 64 ம் ஆண்டு அது திறக்கப்பட்டது. கடந்த 37ஆண்டுகளாக இந்த இடத்தில் செயல்பட்டு வந்த இந்த அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்கி விட்டார் ஊராட்சிமன்றத் தலைவர் சக்திவேல்.
இது தொடர்பாக போலீசில் புகார் செய்தும், மாவட்ட கலெக்டரைச் சந்தித்து நேரடியாகப் புகார் தெரிவித்தும்பலனில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோம்என்றனர் அவர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications