ராஜஸ்தானில் வறட்சி: மத அமைப்பு உதவி
உதய்பூர் (ராஜஸ்தான்):
ராஜஸ்தானில் வறட்சியால் வாடி வரும் மக்களுக்கு உதவுவதற்கு மத அமைப்பு முன் வந்துள்ளது.
ராஜஸ்தானில் கடும் வறட்சி நிலவி வருகிறது. அங்கு வசிக்கும் மனிதர்கள் பட்டினியாலும், தாகத்தாலும் வாடிவருகின்றனர். இவர்களுக்கு உதவுவதாக ராஜஸ்தானில் இருக்கும் தேரா சச்சா சவுதா என்ற மத அமைப்புகூறியுள்ளது. ராஜஸ்தானில் வறட்சியால் வாடிவரும் 800க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவர்களுக்குதேவையான பொருட்களை அனுப்பியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த அமைப்பின் தலைவர் குர்மீட் ராம் ரஹீம் சிங் கூறுகையில், சென்ற மாதம் எங்கள் அமைப்பிலிருந்து 40 பேரைவறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அனுப்பி வைத்தோம். இதில் பார்மர் மற்றும் உதய்பூர் ஆகியஇரு மாவட்டங்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது என்றார்.
எங்கள் அமைப்பிலிருந்து 200 டிரக்குகளில் கால்நடை தீவனங்களும், குடி தண்ணீரும் 250 கிராமங்களுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமைப்பின் தலைவர் ரஹீம் உதய்பூர் மாவட்டம், ஜாதோல் மற்றும் கோட்ரா உள்ளிட்ட வறட்சியால் வாடும் 400கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள ஏழை மற்றும் மலை சாதி மக்களுக்கு உணவு தானியம், கால்நடை தீவனம்மற்றும் உடைகளை கொடுத்தார் என அமைப்பின் தொண்டர் சமீர் பால் என்வர் கூறினார்.
மஹராஜ் ( ரஹீம் சிங்) கிராம மக்களின் சமூக -பொருளாதார நிலை, வாழ்க்கை நிலை ஆகியவற்றை உயர்த்துவதற்குகடும் முயற்சி எடுத்து வருகிறார்.
இவர் கிராமம் கிராமமாக சென்று உழைப்பின் அவசியத்தையும், கல்வியறிவின் அவசியத்தையும், வாழ்க்கை நிலைஉயர வேண்டியதின் அவசியத்தையும் மக்களுக்கு எடுத்துரைக்கிறார்.
இந்த பகுதியில் வாழும் மக்கள் அதிகமாக மது அருந்தி வருகிறார்கள். மது அருந்துவதால் ஏற்படும் தீமை குறித்துமக்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.
படிப்பில் ஆர்வம் கொண்டு படிக்க விரும்புபவர்களுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் பள்ளிச் சீருடைகள்வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார் என கோட்ரா கிராமத்தில் வசிக்கும் சதீஷ் சிங் என்பவர் கூறினார்.
இந்த கிராம மக்களுக்கு ரஹீம்சிங்கின் செயல்திட்டங்கள் புது நம்பிக்கையையும், தெம்பையும் அளித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications