குற்றவாளிகளிடம் அன்பு காட்டுங்கள்
கோவை:
குற்றவாளிகளைத் தண்டித்தால் மட்டும் போதாது, நல்லவர்களிடம் அன்பு காட்ட வேண்டும் என போலீசாருக்குதமிழக ஏ.டி.ஜி.பி.குமாரசாமி அறிவுரை தெரிவித்தார்.
கோவையில் நடந்த எஸ்.ஐ.,க்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்ட தமிழக போலீஸ் இணைஇயக்குநர் குமாரசாமி பேசியதாவது:
அறத் தொழிலை நிலைநாட்டும் அன்புக்குரியவர்களாக காவல் துறையினர் மாற வேண்டும். குற்றவாளிகளைத்தண்டித்தால் மட்டும் போதாது.
நல்லவர்களிடம் அன்பு காட்டும் காவலர்களாக திகழ வேண்டும். காவலர்கள் அரசு ஊழியராக மட்டும்பணியாற்றினால் போதாது. நீதி தேவதையின் பிரதிநிதியாக நின்று செயல்பட வேண்டும்.
இங்கு பயிற்சி பெற்றுச் செல்லும் சார்-ஆய்வாளர்கள் கரடு முரடான பாதையைச் சந்திக்க வேண்டிய அவசியம்உள்ளது.
சிக்கல் நிறைந்த இப்பாதையை நேர்மையான முறையில் வெற்றி கொள்ள வேண்டியது அவசியம். நெறிமுறைதவறாமல் பணியாற்ற வேண்டும் என்றார் குமாரசாமி.












Click it and Unblock the Notifications