புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்பு
சென்னை:
தமிழகத்தின் 12-வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
11-வது சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி சட்டசபைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடந்தது.இத்தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அ.தி.முக. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி விசாரணையைச் சந்தித்துவரும் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.
இந்த நிலையில் புதிய சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. முதல்நாளன்று புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொள்ளவுள்ளனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகராகபொறுப்பேற்றுள்ள எம்.அப்துல் லத்தீப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
தொகுதி வரிசைப்படி பதவிப்பிரமாணம் செய்து வைக்ககப்படும். அந்த வரிசையில் முதல் உறுப்பினராகராயபுரம் தொகுதி உறுப்பினரும், அமைச்சருமான டி.ஜெயக்குமார் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார். கடைசிஉறுப்பினராக கிள்ளியூர் எம்.எல்.ஏ. டாக்டர் குமாரதாஸ் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்.
எம்.எல்.ஏக்கள் பதவியேற்புக்குப் பின் 23-ம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலில்போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் பெறப்படும். அன்று வேறு எந்த அலுவலும் நடக்காது.
24-ம் தேதி போட்டியிருந்தால் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். அ.தி.மு.க சார்பில்முன்னாள் அமைச்சர் காளிமுத்து சபாநாயகர் தேர்தலில் போட்டியிடப் போகிறார். துணை சபாநாயகராகவரகூர் எம்.எல்.ஏ. அருணாச்சலம் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர்களை எதிர்த்து போட்டியிட வேறு யாரும்மனுத்தாக்கல் செய்ய மாட்டார்கள் என்பதால் இவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவர்.
சபாநாயகர் தேர்தல் முடிந்த பிறகு 25-ம் தேதி சட்டசபையின் முதல் கூட்டத்தை ஆளுநர் பாத்திமா பீவி தனதுஉரையுடன் துவக்கி வைக்கிறார். அவரது உரையில் புதிய அரசின் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் உரைக்குப் பின் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஆளுநர் உரை மீதான விவாதம் நடக்கும். அதன்பின்னர் 1ம் தேதி விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளிப்பார்.
ஆளுநர் உரையை தி.மு.க. புறக்கணிக்கும் என்று அக்கட்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications