மின் ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைகிறது
சென்னை:
நெய்வேலி அனல் மின் நிலைய தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம காரணமாகமுதலாவது அனல் மின் நிலையத்தில் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி அனல் மின் நிலைய ஊழியர்கள்போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலில் விதிப்படி வேலை என்ற போராட்டத்தை நடத்திய அவர்கள்தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதனால் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. முதலாவதுமின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நிலையத்தில் பெரும் பாதிப்புஏற்பட்டுள்ளது. இங்கு 220 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, நெய்வேலி மின் நிலைய பொறியாளர்களை வைத்து நிலைமையை சமாளிக்க மின் நிலையநிர்வாகம் முயற்சி செய்தது. ஆனால் தொழிலாளர்கள் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.பொறியாளர்களுக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்துபொறியாளர்களை வைத்து மின் உற்பத்தியை மேற்கொள்ளும் முயற்சி கைவிடப்பட்டது.
நெய்வேலியில் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் அசம்பாவிதச் சம்பவங்கள் நடந்து விடாமல் தடுக்கும்பொருட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications