ஜெ. பதவிப்பிரமாணம்: ஆளுநரை சாடுகிறார் சுவாமி
மதுரை:
ஜெயலலிதாவுக்கு ஆளுநர் பாத்திமா பீவி பதவி பிரமாணம் செய்து வைத்தது ஜனநாயக படுகொலை அவர் அதுகுறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது சுவாமி கூறுகையில், முல்லைப் பெரியாறு அணைதொடர்பாக நான் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எனது மனுவுக்கு தமிழக அரசு ஆதரவுஅளிக்க வேண்டும்.
ராஜீவ்காந்தி நினைவு தினமான திங்கள்கிழமை தீவிரவாத எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ராஜீவ் காந்திகொலை வழக்கில் பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் அவர்களைகைது செய்யுமாறு சோனியா காந்தி இதுவரை கூறவில்லை.
5 மாநில தேர்தல் முடிவு காரணமாக மத்திய அரசில் மாற்றம் வருமா என தெரியவில்லை. ஆனால் வாஜ்பாய்ராஜினாமா செய்ய வேண்டும். சோனியா காந்தி இல்லாத காங்கிரஸ் உருவாக வேண்டும்.
தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற முடியாது. பாலகிருஷ்ண பிள்ளை வேட்புமனு ஏற்கப்பட்டபோது ஆட்சேபம் செய்தனர். அவருக்கு பதவிப்பிரமாணம் செய்ய மறுக்கப்பட்டு விட்டது. இங்குபதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இப்போது இவர்கள் மவுனமாக இருக்கிறார்கள்.
டான்சி வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டால்தான் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்யமுடியும்.அவர் மனு தாக்கல் செய்தால், அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி வேட்பு மனு பரிசீலனையின் போது நான்வாதாடுவேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications