புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு
கொழும்பு:
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக மூத்த அமைச்சர்ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தனிஈழம் கேட்டு வரும் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே தொடர்ந்து 18ஆண்டுகளாகக் கடும் சண்டை நடந்து வருகிறது.
இந்தச் சண்டையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் அமைதிப்பேச்சுவார்த்தையை ஏற்படுத்த நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் முயன்று வருகிறார்.
அவர் பலமுறை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அதிபர் சந்திரிகா ஆகியோரை சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தி விட்டார். இருப்பினும் பேச்சுவார்த்தை தொடங்குவதில் இழுபறி நிலையே நீடிக்கிறது.
இதற்கிடையே, புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கினால் தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்றுபுலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தங்கள் மீதான தடையை நீக்கும் விஷயத்தில் புலிகள் பிடிவாதமாக இருப்பதால் அமைதிப் பேச்சுவார்த்தைதொடங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை மூத்த அமைச்சர் ஒருவர் தி ஐலண்ட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், இலங்கைஇனப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க இலங்கை அரசுவிரும்புகிறது.
இதற்காக புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டுவருகிறது என்று கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications