பூகம்பம், வறட்சி...தற்போது புயல்: அல்லாடும் குஜராத்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

ஜனவரி இறுதியில் பூகம்பம், கோடையில் கடும் வறட்சி என்று பல இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருந்தகுஜராத் மாநிலம், தற்போது புயல் அபாயத்தை எதிர்நோக்கி இருக்கிறது.

குஜராத் கடற்கரையிலிருந்து மேற்கே 500 கிலோமீட்டர் தொலைவில் அரபிக் கடலில் மையம் கொண்டிருந்தகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மணிக்கு ஏழு கிலோமீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருவதாகவானிலை நிறுவனம் தெரிவித்தது.

இது மேலும் தீவிரமடைந்து, சூரத்திற்கும், சவுராஷ்டிராவிற்கும் இடையில் 140 முதல் 160 கிலோமீட்டர் வேகத்தில்கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

25,000 பேரைப் பூகம்பத்தில் பலிகொடுத்த குஜராத், தொடர்ந்து 2ஆவது முறையாக இந்த ஆண்டும் கடும்வறட்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இருந்தாலும், புயல் தரவிருக்கும் சோதனைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது இம்மாநிலம்.

அவசர அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய குஜராத் முதல்வர் கேசுபாய் படேல், அனைத்துக் கடலோரமாவட்டங்களுக்கும் அமைச்சர்களை அனுப்பியுள்ளார்.

மீட்பு நடவடிக்கை அதிகாரிகள் அனைவரும் முடுக்கி விடப்பட்டுள்ளனர். ஹாம் ரேடியோ உள்பட அனைத்துத்தகவல் தொடர்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்டுள்ளனர்.

ராணுவ மற்றும் விமானப்படை வீரர்களும், மாநிலக் காவல் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+