ஊட்டி சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி
ஊட்டி:
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் வரும் மே 27ம் தேதி பழக் கண்காட்சி நடக்கிறது. இதையொட்டி சுற்றுலாப்பயணிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பழமை வாய்ந்தது குன்னூர் சிம்ஸ்பார்க். இந்தப் பூங்கா 1874ம் ஆண்டுஉருவாக்கப்பட்டது. 30 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ. 18 லட்சம் செலவில்புதுப்பிக்கப்பட்டது.
குன்னூர் சிம்ஸ்பார்க்கைப் பொறுத்த வரை இரண்டு விதமான தட்பவெப்ப நிலை நிலவுகிறது. இங்கு ஊட்டியின்குளிரான சூழ்நிலையும், மேட்டுப்பாளையத்தின் தரைப் பகுதிச் சூழ்நிலையும் இணைவதால் இதமான தட்ப வெப்பநிலவுகிறது.
எனவே இந்தப் பகுதியை சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். சிம்ஸ்பார்க்கில் 80 வகையான மலர்கள்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இங்கு நடக்கும் பழக்கண்காட்சி மிகவும் புகழ் பெற்றது. இங்கு நடக்கும் இந்தப் பழக் கண்காட்சிப் போட்டியில்பெற்றி பெறுவோர்க்கு 10 சுழற்கோப்பைகள் வழங்கப்படுகிறது. 120க்கும் மேற்பட்ட பரிசுகளும் வழங்கப்படுகிறது.
எனவே இங்கு பழக்கண்காட்சி நடத்த பழங்கள் குவியும். மே.27ம் தேதி இந்தப் பழக் கண்காட்சி துவங்குகிறது.அதுவரை போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். பழக்கண்காட்சியையொட்டி இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications