முஷாரபுக்கு இந்தியா அழைப்பு: ரஷ்யா வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ:

காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்கு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா, பாகிஸ்தான் ராணுவஆட்சியாளர் முஷாரபுக்கு அழைப்பு விடுத்துள்ளதை ரஷ்யா வரவேற்றுள்ளது.

இதுகுறித்து ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்கும் விதத்திலும், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் இருதரப்புஉறவையும் மேம்படுத்தும் வகையிலும் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரபை இந்தியா பேச்சுவார்த்தைக்குஅழைத்துள்ளது வரவேற்கத்தக்கது.

முன்னதாக, கடந்த 6 மாதமாகக் காஷ்மீரில் அமலில் இருந்த சண்டை நிறுத்தத்தை இந்தியா வாபஸ் பெற்றுக்கொண்டது. ஏனெனில் சண்டை நிறுத்தம் அமலில் இருந்த போதும் காஷ்மீரில் வெளிநாட்டுத் தீவிரவாதிகள்வன்முறையைத் தூண்டி விடும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே விரைவில்பேச்சுவார்த்தை தொடங்கும் என்று ரஷ்யா நம்புகிறது என்று கூறப்பட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+