அரசு அலுவலகங்களில் ஜெ.படங்கள்: அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் ஆணை
கோவை:
அனைத்து அரசு அலுவலகங்களிலும் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை மாட்ட வேண்டும் என்றுஅமைச்சர்கள், அரசு அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளனர்.
அதிமுக ஆட்சியின் புது அமைச்சரவையில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவிகிடைத்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,ஏ.கே.செல்வராஜ் மற்றும்பொள்ளாச்சித் தொகுதி எம்.எல்.ஏ ஜெயராமன் ஆகியோர் அமைச்சராகியுள்ளனர்.
அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு பின்னர் முதல்முறையாக சனிக்கிழமை காலை ரயில் மூலம்கோவை வந்து சேர்ந்தனர் இவர்கள். பின்னர் நேராக அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்று (சர்க்யூட்ஹவுஸ்)சென்று ஓய்வெடுத்தனர். அப்போதே அரசு அதிகாரிகள் அனைவரும் காலை பத்து மணிக்கு மாவட்ட கலெக்டர்அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
மாவட்ட கலெக்டர், எஸ். பி., உட்பட அதிகாரிகள் மாவட்ட கலெக்டரின் வளர்ச்சிமன்றக் கூட்டத்தில் கூடினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலில் வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சர் ஏ.கே செல்வராஜ் பேசுகையில்,அதிகாரிகள், ஜெ ஆட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், நல்ல பெயரை ஈட்டித் தர வேண்டும்,சிறப்பான ஆட்சி நடக்க உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அடுத்து கனிம வளம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
இன்னும் சில தினங்களில் மாண்பு மிகு முதல்வர், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் படங்கள் அனைத்துஅலுவலகங்களிலும் மாட்டப்பட வேண்டும். இதை அரசு அதிகாரிகள் அலுவலகங்களில் கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.
இரண்டாவதாக கடந்த ஆட்சியில் பாதிப்பேருக்கு ஏழை மக்களுக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. சிலருக்குப்பட்டா வழங்கவில்லை. எனவே இவர்களுக்கு உடனடியாகப் பட்டா வழங்க வேண்டும். இன்னும் ஒரு வாரத்தில்பட்டா வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படவில்லை என்றால் அதற்கான காரணத்தை என்னிடம் தெரிவிக்கவேண்டும்.
3வதுதாக, தற்போது கோடைகாலம் நிலவி வருகிறது. எந்தந்தப் பகுதியில் குடிநீர் விநியோகம் இல்லையோ, அங்குஉடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். தாகத்திற்கு தண்ணீர் கொடுப்பத்ை தவிர வேறு எதுவும் மக்கள்எதிர்பார்க்க மாட்டார்கள்.
விவசாயிகளுக்கு பகல் நேரத்தில் மின்சாரம் அளிக்க வேண்டும். அவர்களுக்குத் தடையற்ற மின்சாரம் அளிக்கவேண்டும். இரவு நேரத்தில் மின்சாரம் அளிப்பதால், விவசாயிகள் நிலத்திற்கு நீர்ப் பாய்ச்ச செல்லும்போதெல்லாம்பாதிக்கப்படுகின்றனர். மின்சாரம் அடிக்கடி தடைபடுவதால், மின்மோட்டார்கள் பழுதடைந்து விடுகின்றன. இதனைசரிகட்ட வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் சுகாதாரமே இல்லை. சுகாதரத்தைக் கற்றுக் கொடுக்கும் அரசு மருத்துவனைகளேஇப்படி என்றால், மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. சில நாட்களில் அனைத்து அரசுமருத்துவமனைகளையும் சுத்தப்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் அழைத்து பணியாற்ற வேண்டும்.
போலீஸ் துறையினர் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட நெடுங்காலமாக ஒரேபோலீஸ் ஸ்டேஷனில் அதிகாரியாகப் பணியாற்றுபவர்களை வேறு இடங்களுக்கும் மாற்ற வேண்டும். அவர்கள்நேர்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். போலீசார் எவ்வித வசூல் வேட்டையிலும் ஈடுபடாமல்தடுக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு என்றார்.
அனைத்து அதிகாரிகளையும் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தாலும் சில அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சில நேரங்களில் அமைச்சர் ஜெயராமன், குறிப்பிட்டத் துறையைஅதிகாரிகளை அழைத்தார். ஆனால், அங்கு அவர்கள் இல்லை. அவர்களை உடனடியாகத் தன்னை வந்துசந்திக்குமாறு கூறினார்.
விவசாயத்திற்கு மின்சார நேரத்தை மாற்றி அமைக்கவும், கூட்டுறவுத் துறை அதிகாரிகளை அழைத்தபோதும் எந்தஅதிகாரியும் வந்து சேரவில்லை. இதனால், அமைச்சர், ஆவேசமடைந்தவராக "வெரிகுட் எனச் சொல்லி விட்டுகோபத்தை அடக்கிக் கொண்டார்.
பின்னர், நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், "சட்டசபை நடக்கிறது, இந்த சமயத்தில் அமைச்சர்கள்நிருபர்களிடம் எவ்விதக் கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டாம் என அம்மா கூறியுள்ளார். எனவே, அடுத்தமுறை வரும்போது உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன் எனக் கூறி நிருபர்களின் வாயை அடைத்துவிட்டுச் சென்று விட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications